இன்றைய விவாதங்கள் ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளன – தொலைநோக்குப் பார்வையிலும் பங்குதாரர்களின் நோக்கத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
“செயற்கை நுண்ணறிவு அறக்கட்டளை”, “நீடித்த செயற்கை நுண்ணறிவுக்கான குழுமம்” அமைக்கும் முடிவுகளை நான் வரவேற்கிறேன். இந்த முன்முயற்சிகளுக்காக பிரான்சுக்கும், எனது அன்பு நண்பர் அதிபர் மெக்ரோனுக்கும் வாழ்த்து தெரிவிப்பதோடு எங்களது முழு ஆதரவையும் உறுதிபாபடுத்துகிறேன்.
“செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை” இயற்கையில் உண்மையிலேயே உலகளாவியதாக இருக்க வேண்டும். இது உலகளாவிய தென்பகுதி நாடுகள் மற்றும் அதன் முன்னுரிமைகள், கவலைகள் மற்றும் தேவைகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
இந்த செயல்முறை உச்சி மாநாட்டின் உத்வேகத்துடன் அடுத்த உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடையும்.
நன்றி.
—-
TS/IR/KPG/DL