Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு


பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 29 பதக்கங்களை வென்ற நாட்டின் துணை விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உணர்வை பிரதமர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

பாராலிம்பிக் 2024 சிறப்பு வாய்ந்தது மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது.

நமது அற்புதமான பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 29 பதக்கங்களை நாட்டிற்கு கொண்டு வந்ததில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது, இது விளையாட்டுகளில் இந்தியா அறிமுகமானதிலிருந்து மிகச் சிறந்த செயல்திறனாகும்.

நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உத்வேகமே இந்தச் சாதனைக்கு காரணம். அவர்களின் விளையாட்டு திறன்கள் நமக்கு நினைவில் கொள்ள பல தருணங்களை அளித்துள்ளன வரவிருக்கும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளன.

#Cheer4Bharat”

***

(Release ID: 2053026)

PKV/RR/KR