Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது. 2018 ஏப்ரல் 8ம் தேதியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாரம்பரிய மருத்துவமுறையில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

ஆராய்ச்சி, பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், கூட்டங்கள், நிபுணர்கள் பரிவர்த்தனை, ஆகியவற்றை மேற்கொள்ள தேவையான செலவினம் ஆயுஷ் அமைச்சகத்தின் தற்போதைய திட்டங்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படும்.

பின்னணி:

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறை ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யூனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி நன்கு அமைக்கப்பட்டு குறியீடுகள் செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாரம்பரிய மருத்துவமுறைகளை மேம்படுத்தி, விரிவாக்கி உலகமயமாக்குவதற்கு அதிகாரம் பெற்ற ஆயுஷ் அமைச்சகம் மலேஷியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஹங்கேரி, பங்களாதேஷ், நேபாளம், மொரிஷியஸ், மங்கோலியா, ஈரான், சாவோ டோமி மற்றும் பிரின்ஸ்பி போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.

***