பாரம்பரிய நடனக் கலைஞர் டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரியத்தை வளப்படுத்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பெரிதும் உழைத்தார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவால் வேதனை அடைந்தேன். இந்திய பாரம்பரிய நடனத்திற்கான அவரது சிறப்பும் அர்ப்பணிப்பும் தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து நமது கலாச்சார நிலப்பரப்பில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. நமது பாரம்பரியத்தை வளப்படுத்த அவர் பெரிதும் உழைத்துள்ளார். ஓம் சாந்தி. “
***
PKV/DL
Pained by the passing away of Dr. Yamini Krishnamurthy. Her excellence and dedication to Indian classical dance have inspired generations and left an indelible mark on our cultural landscape. She has worked greatly to enrich our heritage. Condolences to her family and admirers.…
— Narendra Modi (@narendramodi) August 4, 2024