பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப் பேத்திகள் எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சவுந்தர்யா ஆகியோர் தங்கள் பெற்றோர் திரு. வி. ஸ்ரீநிவாசன் மற்றும் திருமதி கீதா ஸ்ரீநிவாசனுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
செல்வி ஐஸ்வர்யா மற்றும் செல்வி சவுந்தர்யா ஆகியோர் பிரதமர் முன்னிலையில் “மைத்ரீம் பஜதா” என்ற பாடலை பாடினார்கள். இந்த பாடல் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியால் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாடப்பட்டது.
இந்த சமஸ்கிருத பாடலை இயற்றியவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
பொது தோழமை மற்றும் உலக அமைதிக்கான கீதமாக இது கருதப்படுகிறது. இந்த பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடியபின் தனது பெரும்பாலான கச்சேரிகளில் பாடிவந்தார். இந்த பாடலின் இறுதியில் “ஸ்ரே யே பூயத் ஸகல ஜனனம்” என்று முடிவடையும். இதன் பொருள் அருளும் மகிழ்ச்சியும் மனித குலத்திற்கு நிறைந்திருக்கட்டும் என்பதாகும்.
****