Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத மண்டபத்தில் உள்ள நடராஜர் சிலை இந்தியாவின் பழங்கால கலை மற்றும் பாரம்பரியத்திற்கு சான்றாக நிற்கும்: பிரதமர்


பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சமூக ஊடக எக்ஸ் பதிவைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் கூறியதாவது:

பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது. ஜி 20 உச்சிமாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக நிற்கும்.

***

ANU/AD/IR/KPG/GK