பாரத் ஓமன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனத்தில் பாரத் பெட்ரோலியம் கழகம் செய்துள்ள முதலீட்டை உயர்த்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீட்டு அளவு அதிகபட்சமாக ரூ. 3000 கோடி வரை உயர்த்தப்படலாம். இந்த முதலீடு மாற்றத்தக்க வாரண்டுகள்/ இதர ஆவணக் கருவிகள் மூலமானதாக இருக்கலாம். பாரத் ஓமன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அரசுத்துறை நிறுவனங்களுக்கான 05.08.2005 தேதியிட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வெளியிடக் கூடிய பங்குகளாக மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த முதலீட்டுக்கு உண்டு.
பாரத் ஓமன் எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனம் தனது நிகர மதிப்பு குறைவு காரணமான விளைவுகளை சமாளிக்க பாரத் பெட்ரோலியம் கழகத்தின் இந்த நிதி உதவி பயன்படும். மேலும் நாட்டின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பெட்ரோலியம் பொருட்கள் கிடைப்பதை அதிகரிக்கவும் மத்தியப் பிரதேச தொழிலியல் மேம்பாட்டுக்கும் அம்மாநிலத்தின் வேலைவாய்ப்பு வரி வரவு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தவும் பயன்படும்.
பின்னணி:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கழகமும் ஒன்று. இந்த நிறுவனம் ஓமன் எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டுத் துறை முயற்சியாக பாரத் ஓமன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது. பாரத் ஓமன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் பினா என்ற இடத்தில் நாளொன்றுக்கு 120 ஆயிரம் பீப்பாய் உற்பத்தித் திறன் கொண்ட ஆறு MMTPA எனப்படும் ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை நிறுவியது. ரூ. 12,754 கோடி திட்டத் செலவினத்தில் 2011 ஜுன் மாதம் இது அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுத்திகரிப்பு ஆலை தது அமைப்பத் திறனில் 100 சதவீதம் அளவுக்கு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது இடையூறு நீக்கத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள ஆறு MMTPA திறன் 7.8 MMTPA திறனாக உயர்த்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீட்டுச் செலவினம் ரூ. 3,072 கோடி இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த தேதியிலிருந்து 36 மாத காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய மோட்டார் வாகன எரிபொருள் கொள்கையின் படி எரிபொருள் உற்பத்தி செய்யத் தேவையான மாற்றங்களை செய்வது இந்த இடையூறு நீக்கத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
எனவே பாரத் ஓமன் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதன் பங்குதாரர்கள் உடனடியாக கூடுதல் நிதி வழங்குவது அவசியமாகிறது. இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓமன் எண்ணெய்க் கழகம் இந்த நிலையில் மேலும் நிதி அளிப்பதற்கான உறுதி மொழி வழங்கத் தயாரக இல்லை என தெரிவித்துள்ளது. எனவே பாரத் பெட்ரோலியம் கழகத்தின் நிர்வாக வாரியம் ரூ. 3000 கோடி அளவுக்கு நிதி வழங்கி இடையூறு நீக்கத் திட்டத்தை செயல்படுத்தவும் கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை திடீரெனக் குறைந்ததால் ஏற்பட்ட அசாதாரணமான இழப்பை ஈடு செய்யவும் முடிவு செய்தது.
இதன் படி பாரத் ஓமன் சுத்திகரிப்பு நிறுவனத்தில் தனது முதலீட்டை மேலும் அதிகரிக்கவும் இடையூறு நீக்கத் திட்டத்தை நிறைவு செய்யவும் ரூ. 3000 கோடியை பாரத் பெட்ரோலியம் கழகம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.