Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாபா சாபேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 21-ம் நூற்றாண்டில், இளைஞர்களின் சக்தியோடு, இளைஞர்களின் கனவுகளோடும் உறுதியோடும், இந்தியா வளர்வதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். இந்தியாவின் வலிமைக்கு இளைஞர்களே அடிப்படைக் காரணம் என்றார்.

அதே நேரத்தில், ஐதரபாத்தில், ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதை நினைவூகூர்ந்த பிரதமர், அக்குடும்பத்தின் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்வதாக தெரிவித்தார். எந்த காரணத்தினாலேயோ, ஒரு தாய் தன் மகனை இழந்துள்ளார், இந்திய தாயும் ஒரு மகனை இழந்துள்ளார் என்றார். பாபா சாகேப் அம்பேத்கர் வகுத்துள்ள பாதையில் இந்த அரசு, தடைகளை வெற்றி கொள்வதற்காக பாடுபடும் என்றார்.

டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரப் பார்வைகளை நினைவுகூர்ந்த பிரதமர், இளைஞர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்ற அரசு முயன்று வருவதாக தெரிவித்தார்.

ஏராளமான தடைகளுக்கிடையே டாக்டர் அம்பேத்கர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து புரிந்த சாதனைகளை பிரதமர் குறிப்பிட்டார். அதன் பிறகு, டாக்டர் அம்பேத்கர் இந்தியா திரும்பி விளிம்புநிலை மக்களின் நலனுக்காக பாடுபட்டார். தற்போது பட்டம் பெறும் இளைஞர்களை டாக்டர் அம்பேத்கரைப் போல, ஏழைகளுக்காகவும், விளிம்புநிலை மக்களுக்காகவும் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இப்பல்கலைக்கழகத்தில் அதிநவீன மாணவர்கள் நடவடிக்கை மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார்.

***