Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாதுகாப்புத் துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

பாதுகாப்புத் துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்


பாதுகாப்புத் துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

பாதுகாப்புத்துறையில் நாட்டை தற்சார்புடையதாக்குவது பற்றி கவனம் செலுத்தப்படுவதால், இந்த இணையக் கருத்தரங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது என தனது உரையில் பிரதமர் கூறினார்

சுதந்திரத்துக்கு முன்பு நம்நாட்டில்  நூற்றுக்கணக்கான ஆயுத தொழிற்சாலைகள் இருந்தன என திரு. நரேந்திர மோடி கூறினார்இரு உலகப் போர்களிலும், இந்தியாவிலிருந்து தான் அதிகளவிலான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனசுதந்திரத்துக்குப்பின், அந்த ஆயுத தொழிற்சாலைகளை பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பல காரணங்களுக்காக, அவைகள் வலுப்படுத்தப்படவில்லை என பிரதமர் கூறினார்.

தேஜஸ் போர் விமானங்களை உருவாக்குவதில், நமது பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் திறமைகள் மீது அரசு நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் கூறினார்.

இன்று தேஜஸ் போர் விமானம் வானில் அற்புதமாக பறக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, ரூ.48,000 கோடி மதிப்பில் தேஜஸ் போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது

கடந்த 2014 ஆம்ஆண்டிலிருந்து, பாதுகாப்புத்துறையை  வெளிப்படைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் எளிதான வர்த்தகத்துடன் முன்னோக்கி கொண்டு செல்ல அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் கூறினார்

உரிமம் தேவையில்லை, கடுமையான ஒழுங்குமுறை தேவையில்லை, ஏற்றுமதி வளர்ச்சி, அன்னிய முதலீடு, தாராளமயமாக்கல் போன்றவற்றை கொண்டு வருவதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என திரு. நரேந்திர மோடி கூறினார்.

நமது உள்ளூர் தொழிற்சாலைகளின் உதவியுடன், உள்நாட்டில் தயாரிக்க கூடிய 100 முக்கியமான தளவாட பொருட்களின் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது என பிரதமர் மேலும் கூறினார்.

 இதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தேவைகளை பூர்த்தி செய்ய, நமது தொழிற்சாலைகள் திட்டமிட முடியும்.

இது அதிகாரப்பூர்வ மொழியில், எதிர்மறையான பட்டியல் என அழைக்கப்படுகிறது. ஆனால் தற்சார்பு மொழியில் இது நேர்மறையான பட்டியல் என அவர் கூறினார்

இந்த நேர்மறை பட்டியலில், நாட்டின் உற்பத்தி திறன் அதிகரிக்கப் போகிறது. இது இந்தியாவில் வேலை வாய்ப்பை அதிகரிக்க போகும் நேர்மறை பட்டியல். நமது பாதுகாப்பு தேவைகளுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கப் போகும் நேர்மறை பட்டியல்இது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு உத்திரவாதம் அளிக்கும் நேர்மறை பட்டியல்.

பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் ஒரு பகுதி, உள்நாட்டு கொள்முதலுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.

ராணுவ தளவாடங்களை வடிவமைப்பதிலும்  மற்றும் உற்பத்தி செய்வதிலும் தனியார் துறையினர் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அப்போதுதான், உலக அரங்கில் இந்தியக் கொடி உயர்ந்து பறக்க முடியும்.

ஒட்டுமொத்த உற்பத்தி துறைக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், முதுகெலும்பாக உள்ளன என அவர் கூறினார். தற்போது மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எல்லாம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் விரிவடைவதற்கு அதிக சுதந்திரம் மற்றும் ஊக்குவிப்பு அளிக்கின்றன.

நாட்டில் அமைக்கப்படும் பாதுகாப்பு தொழில் வளாகங்கள், உள்ளூர் தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உதவும்.

 அதனால்தான், இன்று பாதுகாப்புத்துறையில் தற்சார்பு என்பது, வீரர்கள் மற்றும் இளைஞர்கள் என இரு பிரிவினருக்கும்  அதிகாரம் அளிக்க கூடியதாக பார்க்கப்படுகிறது.