Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாட்னாவில் உள்ள ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம்/மேம்பாட்டுப் பணிக்காக பீகார் அரசின் 11.35 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் பரிமாறிக்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு 11.35 ஏக்கர் நிலத்தை, அனிசாபாத்தில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிலத்துக்கு இணையாக பகிர்ந்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாட்னா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிலம், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய முனைய கட்டிடத்துடன் அதுதொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தை பரிமாறிக் கொள்வதற்கு மாநில அரசும் கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த புதிய முனைய கட்டிடம், ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். இது விமான நிலையத்தின் திறனை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும்.

பின்னணி:

விமான நிலையத்தை ஆண்டுதோறும் 15 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், பாட்னா விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள முனையக் கட்டிடம், 5 லட்சம் பயணிகள் மட்டுமே கையாளும் திறனைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் கூட்ட நெரிசல் நிலவிவருகிறது.