பாடகர் முகேஷின் இந்திய இசையில் அழியாத முத்திரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இன்று மெல்லிசை மேதையின் 100-வது பிறந்த நாள்.
பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“மெல்லிசை மேதை முகேஷின் 100-வது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். காலத்தால் அழியாத இவரது பாடல்கள் பலவிதமான உணர்வுகளைத் தூண்டி, இந்திய இசையில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. அவரது பொன்னான குரலும், ஆன்மாவைத் தூண்டும் பாடல்களும் தலைமுறைகளை தொடர்ந்து வசீகரிக்கும்.
***
SM/PKV/DL
Remembering the maestro of melody, Mukesh, on his 100th birth anniversary. His timeless songs evoke a wide range of emotions and have left an indelible mark on Indian music. His golden voice and soul-stirring renditions will continue to enchant generations.
— Narendra Modi (@narendramodi) July 22, 2023