Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பழம்பெரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


பழம்பெரும்  திரைப்பட நடிகரும், திரைப்படத் இயக்குநருமான திரு மனோஜ் குமார் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோஜ் குமார் இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் என்று பிரதமர் கூறியுள்ளார். குறிப்பாக அவரது படங்களில் பிரதிபலிக்கும் தேசபக்திக்காக அவர் நினைவுகூரப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“புகழ்பெற்ற  திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோஜ் குமார் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக இருந்தார். குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக அவர் நினைவுகூரப்படுகிறார். இது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய அளவில் பெருமித உணர்வைத் தூண்டின. அவை வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”

***

(Release ID: 2118579)

TS/PLM/KPG/SG