ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள மானெக்ஷா அரங்கில் நடைபெற உள்ளது. ஒன்பது மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் இந்தக் கலந்துரையாடலில் காணொளி மூலம் பங்கேற்க உள்ளனர். பிறக் குழந்தைகள் இந்நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிலிருந்தே பங்கேற்க உள்ளனர். இந்தக் கலந்துரையாடல் காலை 10 மணி அளவில் தொடங்கி, 90 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவில் நாணயம் ஒன்றை பிரதமர் நாளை வெளியிட உள்ளார். மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் முன்முயற்சியான “கலா உத்சவ்” என்ற இணையதளத்தையும் துவக்கி வைக்க உள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளிக் குழந்தைகளிடையே கலைகளை ஊக்குவிக்கவும் வெளிப்படுத்தவும் உதவும்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி, மத்திய இணை அமைச்சர் திரு. உபேந்திர குஷ்வாஹா, திரு. ராம் சங்கர் கதிரியா, திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளனர்.
As a part of Teachers' Day celebrations, tomorrow at 10 AM I will attend a programme very close to my heart-interaction with school children
— Narendra Modi (@narendramodi) September 3, 2015
Interaction with school children is refreshing. The enthusiasm of children & their curiosity is always gladdening.
— Narendra Modi (@narendramodi) September 3, 2015