Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு விழாக்களை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்


பல்வேறு விழாக்களை முன்னிட்டு அவை தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம், தில்லி சேக்ரெட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டங்கள், மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற கணேஷ் உற்சவ நிகழ்ச்சி மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் இல்லத்தில் நடைபெற்ற பிஹு கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளில் திரு. ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சரின் ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் கலாச்சார துடிப்பும் பன்முகத்தன்மையும் நம்மை வலுவாக்குகிறது. மக்கள் மத்தியில் இருந்து அவர்களது தனித்துவமான பாரம்பரிய அம்சங்களைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்“

***

PLM/SRI/SG/DL