Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்


பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்ஸ்ரீசந்த் தியானேஸ்வர் மகராஜ் பால்கி மார்க் மற்றும் சந்த் துகாரம் மகராஜ் பால்கி மார்க் ஆகியவற்றுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.  ஸ்ரீசந்த் தியானேஸ்வர் மகராஜ் பால்கி மார்க் கட்டுமானம் 5 கட்டங்களாக மேற்கொள்ளப்படும் மற்றும் சந்த் துகாரம் மகராஜ் பால்கி மார்க் 3 கட்டங்களாக முடிக்கப்படும்.  இந்த திட்டங்கள், இந்த பகுதியில் சிறப்பான இணைப்பை ஏற்படுத்தும் என அவர் கூறினார் மற்றும் இத்திட்டங்களுக்கு ஆசி பெறுவதற்காக பகவான் விட்டல், பக்தர்கள், முனிவர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.  வரலாற்றின் சிக்கலான காலம் முழுவதும் பகவான் விட்டல் மீதான நம்பிக்கை மாறாமல் இருந்தது மற்றும் இன்றும் கூட மாறாமல் உள்ளது என அவர் கூறினார். இந்த யாத்திரை உலகில் மக்கள் மேற்கொள்ளும் மிகப் பழமையான யாத்திரை. இது மக்கள் இயக்கமாக பார்க்கப்படுகிறது.  பல வழிகள், முறைகள், இலட்சியங்கள்  இருக்கலாம், ஆனால், நாம் ஒரே இலக்கை பெற்றுள்ளோம் என்பதை இது கற்றுக் கொடுக்கிறது. முடிவில், அனைத்து பிரிவுகளும்  பகவான் வழிபாடுதான். இது இந்தியாவின் நித்திய அறிவின் அடையாளமாக உள்ளது. இது நமது நம்பிக்கையை கட்டுப்படுத்தவில்லை, ஆனால் விடுவிக்கிறது’’

பகவான் விட்டலின் அவை அனைவருக்கும் சமமானது. நான், அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அனைவருக்குமான நம்பிக்கை என கூறும்போது, இதே உணர்வுதான் அதன் பின்னால் உள்ளது.  இந்த உணர்வு நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை ஊக்குவிக்கிறது. அனைவருக்குமான வளர்ச்சிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று ஊக்குவிக்கிறது என பிரதமர் கூறினார்.

இந்தியாவின் ஆன்மீக வளத்தை எடுத்துக் கூறிய பிரதமர், பந்தர்பூருக்கு செய்யும்  சேவை, ஸ்ரீ நாராயண ஹரிக்கு செய்யும் சேவை என கூறினார். பக்தர்களுக்காக, இன்றும் கூட பகவான் வாழும் பூமி இது என பிரதமர் கூறினார். உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பந்தர்பூர் இருந்ததாக, சந்த் நாம்தேவ் ஜி மகராஜ் கூறுவார் என பிரதமர் கூறினார்.

அவ்வப்போது, நாட்டின் பல பகுதிகளில், இதுபோன்ற மகான்கள் தோன்றி நாட்டுக்கு வழிகாட்டுகின்றனர். இதுதான் இந்தியாவின் சிறப்பு என பிரதமர் கூறினார். தெற்கே மாதவாசார்யா, நிம்பர்காசார்யா, வல்லபாசார்யா, ராமானுஜசார்யா மற்றும் மேற்கே நர்சி மேத்தா, மீராபாய், திரோ பகத், போஜா பகத், பிரிதம் ஆகியோர் பிறந்தனர். வடக்கே, ராமானந்தா, கபிர்தாஸ், கோஸ்வாமி துளசிதாஸ், சுர்தாஸ், குரு நானக் தேவ், சந்த் ராய்தாஸ் ஆகியோர் இருந்தனர். கிழக்கில், சைத்தன்யா மகாபிரபு மற்றும் சங்கர் தேவ் ஆகியோரின் சிந்தனைகள் நாட்டை வளமாக்கின.

வர்காரி இயக்கத்தின் சமூக முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், யாத்திரையில் ஆண்களுக்கு உள்ள அதே ஆர்வம் போல் பெண்களுக்கு இருப்பதுதான் பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் என  கூறினார்.  இது நாட்டில் பெண்கள்  சக்தியின் வெளிப்பாடு. பந்தாரி கி வாரிசம வாய்ப்பை குறிக்கிறது.  பாகுபாடு அபத்தமானது என்று வர்காரி இயக்கம் கருதுகிறது, இதுவே அதன் சிறந்த குறிக்கோள் என பிரதமர் கூறினார்.

வர்காரி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடமிருந்து 3 ஆசிகளை பெற பிரதமர் விரும்பினார். அவர்கள் அவர் மீது வைத்திருந்த அளவுக்கு அதிகமான பாசத்தை பற்றி பேசினார்.  பால்கி மார்க் பகுதிகளில் மரக்கன்றுகளை நட அவர் பக்தர்களை கேட்டுக் கொண்டார். வழி முழுவதும் நடை பாதைகளில் பானைகளை வைத்து குடிநீருக்கு ஏற்பாடு செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.  எதிர்காலத்தில் இந்தியாவில் தூய்மையான புனித தலங்களில் ஒன்றாக பந்தர்ப்பூரை பார்க்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார்.  இந்தப் பணிகள் மக்கள் பங்களிப்புடன் செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார். தூய்மை இயக்கத்துக்கு உள்ளூர் மக்கள் தலைமை தாங்கினால் மட்டுமே, இந்த கனவு நனவாகும் என அவர் கூறினார்.

வர்காரிகள் பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும், இவர்கள் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளனர் எனவும் பிரதமர் கூறினார். 

ஒரு உண்மையான அன்னதாத்தா சமூகத்தை இணைக்கிறார் மற்றும் சமூகத்துக்காக வாழ்கிறார். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு நீங்கள்தான் காரணம் என கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

சுமார் 221 கி.மீ தூரம் உள்ள சந்த் தியானேஷ்வர் மகராஜ் பால்கி மார்க் பகுதியில் தேவிகாட் என்ற இடத்திலிருந்து மொஹால் வரையும் மற்றும் 130 கி.மீ தூரம் உள்ள சந்த் துகாராம் மகராஜ் பால்கி மார்க் பகுதியில் படாஸ் என்ற இடத்திலிருந்து தாண்டேல் – போன்டேல் வரை இரு புறங்களிலும் நடைபாதையுடன் கூடிய பிரத்தியேக நான்கு வழிச்சாலை முறையே ரூ. 6,690 கோடி மற்றும் ரூ.4,400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில், பல தேசிய நெடுஞ்சாலைகளில் 223 கி.மீக்கும் மேற்பட்ட  தூரத்துக்கு ரூ.1,180 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்ட சாலை திட்டங்கள்மேம்படுத்தப்பட்ட சாலை திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். இது பந்தர்பூருக்கான இணைப்பை மேம்படுத்தும்.  மஸ்வத்-பிலிவ்-பந்தர்பூர் (என்எச் 548இ), குர்துவாடி-பந்தர்பூர் (என்எச் 965சி), பந்தர்ப்பூர்-சங்கோலா (என்எச் 965சி), தெம்புர்ணி-பந்தர்பூர் (என்எச் 561ஏ) மற்றும் பந்தர்பூர் -மங்கல்வேதா-உமாதி (என்எச் 561ஏ) ஆகிய சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.

****