Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு துறைகளில் 2016 நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை எளிமைப்படுத்துதல் மற்றும் தாராளமயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்.


 

 

 

 

 

பிரதமர்  திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புது தில்லியில் இன்று 2016 ஜூன் 20 – ந் தேதி மத்திய அரசு அளித்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைத் திருத்தங்களுக்கு பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது. இந்தக் கொள்கைத் திருத்தங்கள் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைத் தாராள மயமாக்கி எளிமைப்படுத்துவதன் மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் புரிதலை எளிமைப் படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதன் மூலம் கூடுதலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற வழிவகை செய்யும். இதனையடுத்து நாட்டின் முதலீடு, வருமானம், வேலைவாய்ப்பு ஆகியன வளர்ச்சி அடையும். திருத்த விவரங்கள் வருமாறு:

 

  1. இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு உற்பத்திப் பொருட்களை மேம்படுத்துவதில் அடிப்படை மாற்றங்கள்

 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவு உற்பத்திப் பொருள்கள் சார்ந்த 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தகத்துக்கான தானாகவே ஏற்படும் மார்க்கத்தில் இந்த திருத்தம் அமைந்திருக்கும்.

 

  1. பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் வரையிலான வெளிநாட்டு முதலீடு

 

தானாகவே நடைபெறும் மார்க்கத்தில் நிறுவனங்களில் அந்நிய நேரடிமுதலீட்டுப் பங்குகள் 49 சதவீதம் வரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டன. 49 சதவீதத்துக்கும் கூடுதலான முதலீடுகள் அந்தந்த நேர்வுகளின் தேவைகள் அடிப்படையில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக எந்த துறைகளில் நாட்டுக்கு அதி நவீன தொழில்நுட்பம் கிடைக்க வாய்ப்பு உள்ளதோ அவற்றுக்கெல்லாம் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வகையில் இந்தத் துறையில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

(i)   49 சதவீதத்திற்கும் கூடுதலான நேரடி முதலீடு இப்போது அரசு அனுமதி மூலம் அதிநவீனத் தொழில்நுட்பம் கிடைக்கும் நிலையிலும் அல்லது இதரப் பதிவு செய்யப்பட்ட காரணங்களுக்காகவும் அனுமதிக்கப்படும்.

 

(ii)  பாதுகாப்புத் துறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 1959 – ம் ஆண்டு ஆயதச் சட்டத்தின் கீழ் வரும் சிறு ஆயுதங்கள் அவற்றுக்கான தோட்டாக்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

 

  1. ஒலிபரப்பு சேவைகளில் நுழைவு மார்க்கத்தை மறு ஆய்வு செய்தல்

ஒலிபரப்பு சேவைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை திருத்தப்பட்டுள்ளது. பகுதி வாரியான புதிய வரம்புகளும் நுழைவு மார்க்கங்களும் கீழ்க் கண்டபடி அமையும்.

 

5.2.7.1.1

(1) தொலை இணைப்புகள் ( ஹப்புகள் அல்லது தொலை இணைப்புகளுடன் மேல் நோக்கி இணைப்பு ஏற்படுத்துதல்)

(2)நேரடியாக வீடுகளுக்கு(DTH);

(3)கேபிள் கட்டமைப்புகள் (தேசிய, மாநில, மாவட்ட  நிலைகளில் பல அமைப்புகளைச் செயல்படுத்துபவர்கள் மற்றும் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக மேம்படுத்துதல் சார்ந்த பணிகள்);

(4)மொபைல் தொலைக்காட்சி;

(5)ஆகாயத்தில் தலைமை முனை இருக்கும் ஒலிபரப்புச் சேவைகள்(HITS)

100%

 

தானாகவே ஏற்படும் மார்க்கம்

5.2.7.1.2 கேபிள் கட்டமைப்புகள்  (கட்டமைப்புகளை மேம்படுத்தாத இதர பலமுறை இயக்கும் நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் மற்றும் உள்ளூர் நிலைக் கேபிள் நிறுவனங்களுக்கும் (LCOs))
49 சதவீதத்துக்கும் கூடுதலான புதிய நேரடி முதலீட்டை துறைசார்ந்த அமைச்சகத்திடம் இருந்து உரிமம் கோராமல் உரிமையாளர்கள்  புதிய வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் கம்பெனிகள் இவ்வாறு பெறுவதற்கு அவற்றுக்கு வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் அனுமதி தேவைப்படும்.
துறை / செயல்பாடு புதிய வரம்பு மற்றும் மார்க்கம்

 

 

  1. மருந்தாக்கத் தொழில்

 

மருந்தாக்கத் தொழிலைப் பொறுத்தவரை முன்னதாக இருந்த கொள்கையின் படி 100 சதவீத அந்நிய நேரடி  முதலீடு தானாகவே பெறும் மார்க்கத்தில் பசுமை நிறுவனங்களுக்கும் 100 சதவீதம் வரையிலான அந்நிய நேரடி முதலீடு செம்பழுப்பு நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதலுடன் அனுமதிக்கப்பட்டது. இந்தத் துறையின் வளர்ச்சயைக் கருத்தில் கொண்டு செம்பழுப்பு மருந்துக் கம்பெனிகளுக்கு 74 சதவீத அந்நிய நேரடி முதலீடு தானாகவே பெறும் மாற்றத்தில் அனுமதிக்கப்படுகிறது. 74 சதவீதத்துக்கம் கூடுதலான அந்நிய நேரடி முதலீடு அனுமதி பெறம் மார்க்கத்தில் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்படும்.

 

  1. சிவில் விமானப் போக்குவரத்து

 

(i)   முந்தைய கொள்கையின் படி பசுமை விமானநிலையத்  திட்டங்களுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும் செம்பழுப்பு விமானநிலையத் திட்டங்களுக்கு 74 சதவீத அந்நிய நேரடி முதலீடும் தானகவே பெற்றுக் கொள்ளும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது. இதில் 74 சதவீதத்துக்கும் கூடுதலான செம்பழுப்பு விமான நிலையத் திட்டங்களுக்கான அந்நிய நேரடி முதலீடு அரசு வழியாகவும் பெறப்பட்டது.

 

(ii)  தற்போதுள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்குவதில் உதவுவதையும் தற்போதுள்ள விமான நிலையங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் உதவுவதையும் நோக்கமாக்க் கொண்டு செம்பழுப்பு  விமானநிலையத் திட்டங்களுக்கும்“ 100 சதவீத அந்நிய நேரடி முதலீடுகள் தானாகவே பெற்றுக் கொள்ளும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படும்.

(iii) முன்பிருந்த கொள்கையின்படி பட்டியல் இடப்பட்ட விமானப் போக்குவரத்து சேவை, உள்நாட்டு பட்டியலிடப்பட்ட பயணியர் விமான சேவை, மண்டல விமான போக்குவரத்து சேவை ஆகியவற்றுக்கு 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு தானாகவே பெற்றுக் கொள்ளும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதில் 49 சதவீதம் தானாகவே பெற்றுக் கொள்ளும் மார்க்கத்திலும் அதற்கு மேற்பட்ட பகுதி அந்நிய நேரடி முதலீடு அரசு அனுமதி மார்க்கத்திலும் பெறப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைப் பொறுத்தவரை அந்நிய நேரடி முதலீடு தானாகவே பெற்றுக் கொள்ளம் மார்க்கத்திலேயே தொடரும். வெளிநாட்டு விமான நிலையங்கள் இந்திய விமான நிலையங்களில் தங்களது செலுத்தப்பட்ட மூலதனத்தில் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வது தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

 

  1. தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்

 

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரை முந்தைய கொள்கையின்படி 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு அரசு அனுமதி பெறும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது. தற்போது தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் 2005 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பதிவு சட்டத்தின்படி உரிமம் பெற வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் போன்ற அரசு ஒப்பதல்களைப் பெறுவதை தவிர்க்கும் வகையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை தானாகவே பெற்றுக் கொள்ளும் வழியில் அனுமதிக்கப்படும். 49 சதவீதத்துக்கும் கூடுதலான அந்நிய நேரடி முதலீடு  74 சதவீதம் வரை அரசு ஒப்பதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்படும்.

  1. கிளை அலுவலகம், தொடர்பு அலுவலகம், திட்ட அலுவலகம் அமைத்தல்

மனுதாரரின் முக்கிய வர்த்தகம் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி, தகவல் ஒலிபரப்பு ஆகிய துறைகளில் இருந்தால் அவர் இந்தியாவில் வர்த்தகம் தொடர்பான கிளை அலுவலகம், தொடர்பு அலுவலகம், திட்ட அலுவலகம் போன்றவற்றை அமைக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. அதாவது மனுதாரர் சம்மந்தப்பட்ட அமைச்சகம் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து வெளிநாட்டு மூலதன வளர்ச்சிவாரிய அனுமதி பெற்றிருந்தால் ரிசர்வ் வங்கி அனுமதியிலிருந்து விளக்களிக்கப்படுகிறது.

 

  1. கால்நடை வளர்ப்பு

 

2016 அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி நாய் இனவிருத்தி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத் துறை, மீன்வளர்ப்பு, பிற நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு தானாகவே பெற்றுக்  கொள்ளும் மார்க்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். ஆனால் தற்போது இந்த கட்டுப்படுத்தப்பட்ட நிலைகள், நிபந்தனை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

 

  1. ஒரே வணிகப்பெயரில் சில்லறை விற்பனை

 

அதிநவீன முன்னெடுப்பு தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் தொடர்பான ஒரே வணிகப்பெயரில் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு அரசின் அனுமதியுடன் கூடிய உள்ளூர் பொருட்கள் பெறும் நெறிமுறை 3 ஆண்டுகளுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடகங்கிய காலத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கான பெறுதல் இடம் குறித்த நெறிமுறைகள் 3 ஆண்டுகளுக்குப் பொருந்தாது. அதாவது அதிநவீன முன்னெடுப்பு தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரே வணிகப்பெயர் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதல் கடையைத் திறந்தவுடன் உள்ளூர்க் கொள்முதல் அவசியம் இல்லாத நிலையில் இந்த நெறிமுறைகள் பொருந்தாது. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொள்முதல் நெறிமுறைகள் பொருந்தும்.

 

பின்னணி:

கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைச் சீர்திருத்தங்களைப் பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத்துறை, ஒலிபரப்புத்துறை, தேயிலை, காப்பி, ரப்பர், ஏலம், எண்ணைப்பனை, ஆலிவ் மரங்கள், ஒற்றை வணிகப்பெயரில் சில்லறை வர்த்தகம், உற்பத்தி துறை, பொறுப்பு வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து,  கடன் தகவல் நிறுவனங்கள், துணை நிறுவனங்கள், சொத்து சீரமைப்பு நிறுவனங்கள் ஆகிய துறைகளில் கொண்டுவந்துள்ளது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து 2015-16 – ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 55.46 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2013-14 – ம் ஆண்டில் இது 36.04 பில்லியன் டாலராக இருந்த்து. குறிப்பிட்ட ஒரே நிதி ஆண்டில் இந்த அளவு அந்நிய நேரடி முதலீடு வந்திருப்பது இது மிக உயரிய அளவாகும். எனினும் மேலும் அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான திறன் நாட்டில் உள்ளது. அந்நிய நேரடி முதலீடு சார்ந்த நெறிமுறைகளை மேலும் தாராள மயம் மற்றும் எளிமைப்படுத்துவதன் மூலம் இதனைச் சாதிக்கலாம்.

 

இதனடிப்படையில் மத்திய அரசு 2016 ஜூன் 20 –ந் தேதி அந்நிய நேரடி முதலீடு குறித்த நெறிமுறைகளை பெரிய அளவில் தாராளமாக்கியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு பெரிய அளவில் வேகம்தர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 நவம்பரில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள 2 – வது பெரிய சீர்திருத்த நடவடிக்கை இது.

 

கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் சில: பகுதி சார்ந்த வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. தானாகவே பெற்றுக் கொள்ளும் மார்க்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன, வெளிநாட்டு முதலீட்டில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான வரன் முறைகளை மேலும் எளிமையாக்குவதை நோக்கமாக்க் கொண்டவை. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறந்த இலக்காக இந்தியாவை மாற்றுவதும் நோக்கமாகும். பல்வேறு துறைகள் இந்த மாற்றங்களை அடுத்து நேரடி அந்நிய நேரடி முதலீட்டின் தானாகவே செய்து கொள்ளும் மார்க்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு சிறிய பட்டியல் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை இந்தியாவை மிகவும் திறந்த நிலை பொருளாதாரமாக இந்த திருத்தங்கள் மாற்றி அமைத்துள்ளன.