ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற “பருவநிலை நிதியை மாற்றுதல்” குறித்த சிஓபி-28 தலைமத்துவ அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வு வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதியை மேலும் கிடைக்கக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும், ஏற்றதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தியது.
இந்த அமர்வின் போது, தலைவர்கள் “புதிய உலகளாவிய காலநிலை நிதிக் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் பிரகடனத்தை” ஏற்றுக்கொண்டனர். இந்தப் பிரகடனத்தில் உறுதிமொழிகளை வழங்குதல் மற்றும் லட்சிய விளைவுகளை அடைதல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான சலுகை நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் ஆகிய கூறுகள் அடங்கியுள்ளன.
பிரதமர் தனது உரையில், உலகளாவிய தெற்கின் கவலைகளுக்குக் குரல் கொடுத்தார். வளரும் நாடுகள் தங்களின் பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், தங்களின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்துவதற்கும், குறிப்பாக காலநிலை நிதியை, நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான அவசரத் தேவையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதி செயல்படுத்தப்படுவதையும், ஐக்ககிய அரபு அமீரகத்தின் சிஓபி-28 இல் பருவநிலை முதலீட்டு நிதி நிறுவுவப்படுவதையும் பிரதமர் வரவேற்றார்.
சிஓபி-28 பருவநிலை நிதி தொடர்பான பின்வரும் சிக்கல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்:
பருவநிலை நிதி குறித்த புதிய கூட்டு அளவீட்டு இலக்கில் முன்னேற்றம்
பசுமை பருவநிலை நிதி மற்றும் தகவமைப்பு நிதியை திரும்பப் பெறுதல்
பருவநிலை நடவடிக்கைக்காக பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் மூலம் ஏற்ற வகையில் நிதி கிடைக்கப்பெற வேண்டும்
வளர்ந்த நாடுகள் 2050க்கு முன் தங்கள் கார்பன் தடத்தை அகற்ற வேண்டும்.
*******
ANU/AD/BS/DL
Speaking at the session on Transforming Climate Finance during @COP28_UAE Summit. https://t.co/Gx5Q1F7vVO
— Narendra Modi (@narendramodi) December 1, 2023