Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, ‘உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பகிர்ந்துள்ளார்


பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, “உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்” என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளதுடன் தேர்வுக்கு   மாணவர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது குறித்து பகிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பரீட்சைக்கு பயமேன் (#ExamWarriors) என்ற நூலில் உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற ஒரு வழிமுறை இடம் பெற்றுள்ளது.

#தேர்வு குறித்த கலந்துரையாடல்  (#ParikshaPeCharcha) நெருங்கி வரும் சூழலில், தேர்வுக்கு தயாராவது குறித்த சுவராஸ்யமான  அனுபவங்கள் உட்பட நீங்கள் எவ்வாறு தேர்வுக்குத் தயாராகிறீர்கள் என்பதை பகிர்ந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.  தேர்வு எழுதுபவர்களை நிச்சயம் நான் ஊக்கப்படுத்துவேன்.”

——

(Release ID: 1891545)

SG/PLM/KPG/KRS