நாட்டின் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, அந்தமான் & நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர், ராணுவ தளபதி மற்றம் முப்படைகளின் தலைவர்கள், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் ஆகிய அனைவருக்கும் வணக்கம்.
பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள். வரலாறு உருவாகும்போது, வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது. அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும்.
சகோதர சகோதரிகளே,
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது. வீர் சாவர்க்கரும் அவரைப் போன்ற பல மாவீரர்களும் இந்த மண்ணில் நாட்டிற்காக தவம் செய்து தியாகத்தின் உச்சத்தை தொட்டவர்கள். அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன. அந்தமானின் அடையாளம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளுக்குப் பதிலாக அடிமைத்தனத்தின் அடையாளங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. நமது தீவுகளின் பெயர்களில் கூட அடிமைத்தனத்தின் முத்திரை இருந்தது. இன்று ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவாகவும், ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் தீவுகளாகவும் மாறிவிட்டது. ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் ஆகிய பெயர்கள் நேதாஜியால் வழங்கப்பட்டவை. சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்திய தேசிய ராணுவ அரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, எங்கள் அரசு இந்த பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தியது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூரப்படுகிறது. அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பட்டொளி வீசிப் பறக்கிறது. இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது முதல் அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது. வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குகின்றன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பணிகள் சுதந்திரத்திரத்திற்குப் பிறகு, உடனே விளக்கியிருக்க வேண்டும். கடந்த 8-9 ஆண்டுகளில் அவர்கள் அப்பணியை செய்து வருகிறோம். 1943-ம் ஆண்டு நாட்டின் இந்தப்பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. நாடு அதிகப் பெருமையுடன் இதை ஏற்றுக் கொண்டது. இந்த அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கொடி ஏற்றப்பட்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக நேதாஜியின் வாழ்க்கை முறை குறித்து கோப்புகளை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று நமது ஜனநாயக அமைப்பிற்கு முன்பாக நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை அமைந்துள்ளது, நமது கடமைகளை அவை நினைவுப்படுத்துகின்றன.
தங்களுடைய ஆளுமைகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் குறித்த காலத்தில் பொதுமக்களுடன் இணைத்து, திறமையான லட்சியங்களை ஏற்படுத்தி, பகிர்ந்து கொண்ட நாடுகளே வளர்ச்சி மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் போட்டியில் மிகவும் முன்னேறிய நாடுகள். விடுதலைப்பெருவிழாவின் அமிர்த காலத்தில் இந்தியா அதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
21 தீவுகளுக்கு பெயரிடப்பட்டதற்கு பின்பு உள்ள ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிறப்புமிக்க செய்தியை எடுத்துரைக்கிறது. இது இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகத்தை குறிப்பிடும் செய்தியாகும். தாய்நாடான இந்தியாவைப் பாதுகாக்க பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேர் அனைத்தையும் தியாகம் செய்தனர். இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிக்க வீரர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளை, பேச்சுகளைக் கொண்ட, பலதரப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டவர்கள். ஆனால் தாய் நாட்டிற்காக அவர்களை பாரதத்தாய் ஒன்றிணைத்தாள். பல்வேறு தீவுகளை கடல் இணைப்பது போல், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு பாரதத்தாயின் ஒவ்வொரு குழந்தையையும் ஒருங்கிணைக்கிறது. அந்தமானில் உள்ள மலைக்கு கார்கில் போரில் பங்கேற்ற கேப்டன் விக்ரம் பத்ரா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மறு பெயரிடப்படும் நிகழ்வானது பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்கள் மற்றும் இந்திய ஆயுதப்படைக்கும் அர்ப்பணிக்கும் விதமாக அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்டக்காலத்திலிருந்தே நமது ராணுவத்தினர் பல்வேறு போர்களைச் சந்தித்து, அனைத்து வகையிலும் தங்களது வீர, தீரச் செயல்களை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். அத்தகைய வீரர்களையும், ராணுவத்தினரையும் போற்றிப் பாராட்டுவது நம் நாட்டின் கடமையாகும். அத்தகைய நடவடிக்கை இன்று முழுமை பெறுகிறது. அதாவது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத தீவுகளுக்கு ராணுவ வீர்ர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் வைப்பது மிகச் சரியான நடவடிக்கையாகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்பது நீர், இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல், வீரம், பாரம்பரியம், சுற்றுலா, ஆக்கம் மற்றும் ஊக்கம் போன்றவற்றின் தொகுப்பாகும். இத்தகைய பெருமைமிக்க ஆற்றலைக் கண்டறிந்து பெருமைகளைப் பறைச்சாற்றவேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டைக் காட்டிலும், 2022-ல் அந்தமானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரித்து சுற்றுலா தொடர்பான வருவாய் அதிகரித்துள்ளது. அந்தமானுக்கும் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலர் இங்கு வந்து வரலாற்று அனுபவங்களைக் கண்டு உணர்கின்றனர்.
கடந்த கால ஆட்சியில் தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை மூலம் இந்தியாவின் உண்மையான சக்தியை உணரத் தவறிவிட்டனர். இமாலய மாநிலங்கள் ஆகட்டும் குறிப்பாக வடகிழக்கு, அந்தமான் நிக்கோபார் தீவுகளாகட்டும் பல ஆண்டுகளாக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஏனெனில், அந்தப் பகுதிகள் தொடர்பற்ற நிலையிலும் எளிதில் செல்ல முடியாத வகையிலும் அமைந்துள்ளது என்று தவறான கண்ணோட்டத்துடன் அணுகியதால் வந்த விளைவாகும். சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் சிஷல்ஸ் போன்ற தீவுகள் வளர்ச்சி அடைந்தன. மேற்கூறப்பட்ட நாடுகளின் புவியியல் பரப்பளவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைவிட குறைந்ததாகும். ஆனால், அந்த தீவுகள் ஆதாரங்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நன்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது என்றார். நமது நாட்டில் உள்ள தீவுகளுக்கும் அத்தகைய திறனும் ஆற்றலும் உள்ளது. அதனைப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. மிகவேக இணையதள வசதியை அந்தமானில் ஏற்படுத்துவதற்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை பயன்படுத்தப்பட்டிருப்பதன் விளைவாக டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகளும், பல்வேறு கடினமான சேவைகளும் எளிமையாக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.
***
(Release ID: 1892962)
PKV/KRS
Naming of 21 islands of Andaman & Nicobar Islands after Param Vir Chakra awardees fills heart of every Indian with pride. https://t.co/tKPawExxMT
— Narendra Modi (@narendramodi) January 23, 2023
अंडमान की ये धरती वो भूमि है, जिसके आसमान में पहली बार मुक्त तिरंगा फहरा था। pic.twitter.com/oAuaFm6VGh
— PMO India (@PMOIndia) January 23, 2023
सेल्यूलर जेल की कोठरियों से आज भी अप्रतिम पीड़ा के साथ-साथ उस अभूतपूर्व जज़्बे के स्वर सुनाई पड़ते हैं। pic.twitter.com/zfXev6tw9z
— PMO India (@PMOIndia) January 23, 2023
India pays tributes to Netaji Bose - one of the greatest sons of the country. pic.twitter.com/GsjHVL4uDL
— PMO India (@PMOIndia) January 23, 2023
बीते 8-9 वर्षों में नेताजी सुभाष चंद्र बोस से जुड़े ऐसे कितने ही काम देश में हुये हैं, जिन्हें आज़ादी के तुरंत बाद से होना चाहिए था। pic.twitter.com/NnzkmIlpbb
— PMO India (@PMOIndia) January 23, 2023
जिन 21 परमवीर चक्र विजेताओं के नाम पर अंडमान-निकोबार के इन द्वीपों को अब जाना जाएगा, उन्होंने मातृभूमि के कण-कण को अपना सब-कुछ माना था। pic.twitter.com/lrCK2C69qc
— PMO India (@PMOIndia) January 23, 2023
सभी 21 परमवीर...सबके लिए एक ही संकल्प था- राष्ट्र सर्वप्रथम! India First! pic.twitter.com/4LarHjMkU1
— PMO India (@PMOIndia) January 23, 2023
अंडमान-निकोबार की धरती वीर क्रांतिकारियों के त्याग और तप की साक्षी रही है। यहां के द्वीप समूहों के नामकरण का अवसर मिलना मेरे लिए बड़े सौभाग्य की बात है। pic.twitter.com/wzsX95ol8f
— Narendra Modi (@narendramodi) January 23, 2023
अंडमान में प्रकृति, पराक्रम, पर्यटन और प्रेरणा सब कुछ है। अब नेताजी सुभाष चंद्र बोस से जुड़े स्मारक और हमारी सेना के शौर्य की याद दिलाते द्वीप भी देशवासियों को यहां आने के लिए प्रेरित करेंगे। pic.twitter.com/GXEIhTXCrk
— Narendra Modi (@narendramodi) January 23, 2023
आज देश में प्राकृतिक संतुलन और आधुनिक संसाधनों को एक साथ आगे बढ़ाया जा रहा है। अंडमान-निकोबार इसकी एक बड़ी मिसाल है। pic.twitter.com/QjewhwDYzM
— Narendra Modi (@narendramodi) January 23, 2023