Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பனாரஸ் இந்து பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

பனாரஸ் இந்து பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

தனது உரையில் இந்த பல்கலைக் கழகத்தின் நிறுவனரான மகாமானா மதன்மோகன் மாளவியாவிற்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தேசத்தை உருவாக்குவதற்கான அறிவுத் திறனும் மதிப்பீடுகளும் கொண்டிருந்த, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்க முனைந்த, தொலைநோக்கு கொண்டவர் அவர் என்று சித்தரித்தார்.

கல்வி என்பது பட்டமளிப்பு விழாவுடன் முடிந்துவிட்டதாகக் கருதிவிடக் கூடாது என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளே புதைந்திருக்கும் மாணவன் என்ற சிந்தனையை எப்போதும் உயிரோட்டத்துடனேயே வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வித விருப்பு-வெறுப்பற்ற உணர்வுடனேயே சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். நாடும் உலகமும் இன்று சந்தித்து வரும் சவால்களை தீர்த்து வைக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உலகின் பல நாடுகளையும் இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அரிவாள் அணு இரத்த சோதனை, உலக வெப்பமயமாதல், சூரிய ஒளி வழியே மின் உற்பத்தி போன்றவற்றை உதாரணங்களாக சுட்டிக் காட்டினார்.

இந்த விழாவில் குழுமியிருந்த அரசுப்பள்ளி மாணவர்களை தனது சிறப்பு விருந்தினர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பட்டமளிப்பு விழாவில் பதக்கங்களை வென்ற பட்டதாரி மாணவர்கள் அவர்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இத்தகைய சாதனைகளை தாங்களும் நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தை அவர்கள் பெறுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

***