Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்ம விருது பெற்றவரும், புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ். மணிலால் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பத்ம விருது பெற்றவரும் புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ். மணிலால் மறைவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

பத்ம விருது பெற்றவரும், புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ்.மணிலாலின் மறைவு, மிகுந்த  வருத்தம் அளிக்கிறது. தாவரவியலில் அவரது வளமான பணி, வரவிருக்கும் தாவரவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடரும். கேரளத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தத் துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.”

***

TS/BR/KR