குடியரசுத் தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள திரு. ராம் நாத் கோவிந்த்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துகள். தனது ஞானத்தையும் பணிவையும் ஒவ்வொரு இந்தியனுக்கு அவர் அளித்துள்ளார். முக்கியமான கொள்கை விவகாரங்களையும் அவர் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதில் குடியரசுத் தலைவர் விருப்பம் கொண்டவராகவும் திகழ்கிறார்” என அவர் கூறியுள்ளார்.
Congratulations to Rashtrapati Ramnath Kovind Ji on completing 1 year in office. He’s endeared himself to every Indian with his wisdom and humility. He is extremely well versed in key policy issues. Rashtrapati Ji is also passionate about empowering the youth, farmers & poor.
— Narendra Modi (@narendramodi) July 25, 2018