Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பதர்பூர்-பரீதாபாத் இடையே மெட்ரோ ரெயில் பாதையை பிரதமர் துவக்கி வைத்தார்

நம் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிக அவசியம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். படைவீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டம் பற்றி மத்திய அரசு அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் நேற்று இது பற்றிய அறிவிப்பு வெளியானது என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 8000 கோடி முதல் 10000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், இதற்கு முன்பு இதுபற்றிய மதிப்பீடுகளிலிருந்து இது மிகவும் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பதர்பூர்-பரீதாபாத் மெட்ரோ ரெயில் பாதையை பரீதாபாத்தில் துவக்கி வைத்தபோது பிரதமர் இதுபற்றி பேசினார்.

நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அரசியல் ஆக்குவது வழக்கமாகி விட்டது என்று பிரதமர் அப்போது வருத்தம் தெரிவித்தார். நமது படைவீரர்கள் மற்றும் மக்களை யாரும் தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடாது என்று குறிப்பிட்ட பிரதமர் நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில் அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவிலான கொள்கைகளும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அரியானா மாநிலத்தில் குறிப்பிட்ட அளவு படைவீரர்கள் இருப்பதால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அறிவித்ததன் வாயிலாக அரியானா மாநிலத்தின் பொருளாதாரம் நன்கு உயரும் என்று பிரதமர் கூறினார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் வளர்ச்சி ஒன்றே தீர்வு என்று குறிப்பிட்ட பிரதமர் இதற்காக மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் கடினமான நிலையை கடந்து வரும்போது இந்தியாவில் மட்டும் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று கூறினார். மத்திய அரசும், மாநில அரசுகளும் தோளோடு தோள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் வீடுகள் கட்டித் தர அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் அவர்.

சென்டிரல் தில்லி மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து பரீதாபாத் வரை, அதேபோல் அங்கிருந்து சென்டிரல் தில்லி வரையிலும் மெட்ரோ ரெயிலில் பிரதமர் பயணம் மேற்கொண்டார். பயணத்தின்போது பல்வேறு தரப்பட்ட மக்களோடு குறிப்பாக இளைஞர்களோடு அவர் கலந்துரையாடினார்.

••••••