Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு இரண்டு குழுக்கள் அமைப்பு


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு இரண்டு குழுக்கள் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

149 உறுப்பினர்கள் கொண்ட தேசிய குழுவிற்கு பிரதமர் தலைவராகவும், 23 உறுப்பினர்கள் கொண்ட செயல் குழுவிற்கு உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைவராகவும் இருப்பார்கள்.

தேசிய குழு உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் திரு அடல்பிஹாரி வாஜ்பாய், முன்னாள் பிரதமர் திரு. எச்.டி. தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திருமதி சுஷ்மா ஸ்வராஜ், திரு. அருண் ஜெட்லி, திரு மனோகர் பாரிக்கர், முன்னாள் துணைப் பிரதமர் திரு. எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தலைவர் திரு அமித் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பீகார் முதல்வர் திரு. நிதிஷ் குமார், வேளாண்மைத் துறை முன்னாள் அமைச்சர் திரு. சரத்பவார், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சரத் யாதவ், யோகா குரு பாபா ராம்தேவ், பாடலாசிரியர் திரு. பிரசூன் ஜோஷி, திரைப்பட இயக்குநர் திரு சந்திரபிரகாஷ் திவிவேதி, முன்னாள் ஹாக்கி வீரர் திரு. தன்ராஜ் பிள்ளை, முன்னாள் பாட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் திரு. புல்லேலா கோபிசந்த், சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் திரு பிந்தேஷ்வர் பதக் ஆகியோர் தேசிய குழுவில் சேர்க்கப் பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. ஆர்.சி. லஹோட்டி, விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் சீப் மார்ஷல் (ஓய்வு) எஸ். கிருஷ்ணசாமி, அரசியல்சாசன நிபுணர் திரு.சுபாஷ் காஷ்யப், சுற்றுச்சூழல் நிபுணர் திரு சி.பி. பட் ஆகியோரும் தேசிய குழுவில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்தக் குழுவில் பல்வேறு ஆளுநர்கள், முதல்வர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூகத் தொண்டர்கள் மற்றும் மதத் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா இந்தக் கமிட்டியின் கன்வீனராக இருப்பார்.

***