Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை


பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பாரத அன்னையின் சேவைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்தியோதயாவின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஆளுமையும், பணியும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என்று திரு. மோடி கூறினார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா குறித்த தது எண்ணங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

அந்தியோதயாவின் நிறுவனரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தமது வாழ்நாள் முழுவதையும் பாரத மாதாவின் சேவைக்காக அர்ப்பணித்தவர், அவரது ஆளுமையும், பணியும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

***