பணி இடை பயிற்சி பெற்று வரும் 100 முதுநிலை இந்திய ஆட்சி பணி (ஐ.ஏ.எஸ்.) அலுவலர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது வளர்ச்சி பணிகள்; விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் உணவு பதப்படுத்துதல்; பணவீக்கம்; பொது சுகாதாரம்; பழங்குடியினர் மற்றும் சமூக நலன்; பெண் சிசுக் கொலை; மற்றும் திறன் மேம்பாடு சார்ந்த துறைகள் குறித்த தங்களது அனுபவங்களை ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் பகிர்ந்துகொண்டனர்.
அலுவலர்களின் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் பாராட்டினார்.நிர்வாக திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் புதுமுயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். நிர்வாக மேம்பாட்டில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துக் கூறிய பிரதமர் ‘பிரகதி’ திட்டத்தின் மூலம் மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடனுமான தமது கலந்துரையாடலை பற்றி எதுத்துரைத்தார். அலுவலர்கள் அனைவரையும் ஒரே குழுவாகவும் நம்பிக்கையுடனும் செயப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
பிரதமர் அலுவலக இணையமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், அமைச்சரவை செயலர் திரு. பி.கே. சின்ஹா, பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை செயலர் திரு.பி.கே. மிஷ்ரா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
Prime Minister’s Office11-October, 2015 10:10 IST
Was great hearing experiences of IAS officers in various fields, participating in mid-career training programme. http://t.co/Yrkc4OI75Z
— Narendra Modi (@narendramodi) October 12, 2015