Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பணிக்குழு-9 விண்வெளி வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பணிக்குழு-9 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் க்ரூ-9 விண்வெளி வீரர்களின் துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது மனித ஆற்றலின் வரம்புகளுக்கு அப்பால் துணிச்சலாக கனவு காண்பது மற்றும் அந்தக் கனவுகளை நனவாக்கும் தைரியம் ஆகியவை ஆகும் என்று திரு மோடி கூறினார். சுனிதா வில்லியம்ஸ், ஒரு முன்னோடியாகவும், அடையாளமாகவும், தனது வாழ்நாள் முழுவதும் இந்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;

Welcome back, #Crew9! பூமி உங்களைக் காணாமல் தவித்தது.

அவர்களின் நிலைமையானதுபொறுமை, துணிச்சல் மற்றும் எல்லையற்ற மனித உணர்வுக்கு ஒரு சோதனையாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் #Crew9 விண்வெளி வீரர்கள் விடாமுயற்சி என்றால் என்ன என்பதை மீண்டும் நமக்கு நிரூபித்துள்ளனர். பரந்து விரிந்த, அறியப்படாத அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு மில்லியன் கணக்கானவர்களை என்றென்றும் ஊக்குவிக்கும்.

விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளுக்கு அப்பால் துணிச்சலாகக் கனவு காண்பது மற்றும் அந்தக் கனவுகளை நனவாக்கும் தைரியம் ஆகியவை ஆகும். சுனிதா வில்லியம்ஸ், ஒரு முன்னோடியாகவும், அடையாளமாகவும், தனது வாழ்நாள் முழுவதும் இந்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். துல்லியம் ஆர்வத்தையும், தொழில்நுட்பத்தையும் விடாமுயற்சியையும் எதிர்கொள்ளும்போது என்ன நிகழும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

***

(Release ID: 2112640)
TS/IR/RR/KR