Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை

பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை


வணக்கம்!

எனது அமைச்சரவை சகாக்களே, நிதி மற்றும் பொருளாதார நிபுணர்களே, பங்குதாரர்களே, மக்களே!

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த இந்த பட்ஜெட் இணையவழி கருத்தரங்கு ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரியும். இந்த பட்ஜெட் நமது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழு பட்ஜெட் ஆகும். நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பல  துறைப்பிரிவுகளில்அரசு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  அதை நீங்கள் பட்ஜெட்டில் பார்த்திருப்பீர்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பட்ஜெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

தற்போது 10 ஆண்டிற்கும் மேலாக அரசின் கொள்கைகளில் இத்தகைய நிலைத்தன்மையை நாடு காண்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தொடர்ந்து சீர்திருத்தங்கள், நிதிசார் ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளது. நிலைத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களின் உத்தரவாதம் நமது தொழில்துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு மாற்றமாகும். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உள்ள ஒவ்வொரு பங்குதாரருக்கும் வரும் ஆண்டுகளில் இந்த நிலைத்தன்மை அப்படியே இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். முழு நம்பிக்கையுடன் முன்னேறி பெரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களை  கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய வழிகளை நாம் தொடங்க வேண்டும். தற்போது உலகின் ஒவ்வொரு நாடும் இந்தியாவுடனான அதன் பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்த விரும்புகிறது. இந்தக் கூட்டாண்மையை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ள நமது உற்பத்தித் துறைகள் முன்வர வேண்டும்.

நண்பர்களே,

எந்தவொரு நாட்டிலும் வளர்ச்சிக்கு நிலையான கொள்கை மற்றும் சிறந்த வணிகச் சூழல் மிகவும் முக்கியமானதாகும். அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மக்கள் நம்பிக்கை சட்டத்தைக் (ஜன் விஸ்வாஸ்) கொண்டு வந்தோம். இணக்கங்களைக் குறைக்க முயற்சித்தோம், மத்திய மற்றும் மாநில அளவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது. மேலும் இந்தச் செயல்பாடு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எங்கள் அரசு விரும்புகிறது. எனவே, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி முறையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

நண்பர்களே,

தற்போது, உலகில் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. முழு உலக நாடுகளும் இந்தியாவை ஒரு வளர்ச்சி மையமாகப் பார்க்கிறது. கோவிட் நெருக்கடியின் போது, உலகப் பொருளாதாரம் மந்தமானபோது, இந்தியா உலகளாவிய வளர்ச்சியை துரிதப்படுத்தியது. இது அப்படியே நடக்கவில்லை. தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நாங்கள் பின்பற்றி, சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்தினோம். எங்கள் முயற்சிகள் கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தை பொருளாதாரத்தில் குறைத்தன. இது இந்தியா விரைவாக வளரும் பொருளாதாரமாக மாற உதவியது. இன்றைய சூழ்நிலையிலும் கூட, இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி இயந்திரமாக உள்ளது. அதாவது, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இந்தியா தனது மீள்தன்மையை நிரூபித்துள்ளது.

நண்பர்களே,

தற்போது 14 துறைகள் எங்களுடைய உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் பலனைப் பெறுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 750-க்கும் மேற்பட்ட அலகுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு, 13 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி மற்றும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது. நமது தொழில்முனைவோருக்கு வாய்ப்பு கிடைத்தால், ஒவ்வொரு புதிய துறையிலும் அவர்கள் முன்னேற முடியும் என்பதை இது காட்டுகிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க இரண்டு பணிகளைத் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தரமான தயாரிப்புகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மேலும் செலவுகளைக் குறைக்க திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இங்குள்ள அனைத்து பங்குதாரர்களும் உலகளாவிய தேவை உள்ள மற்றும் நாம் உற்பத்தி செய்யக்கூடிய புதிய தயாரிப்புகளை அடையாளம் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் ஏற்றுமதி சாத்தியக்கூறுகள் உள்ள நாடுகளுக்கு நாம் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

இந்தியாவின் உற்பத்திப் பயணத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை முன்னோக்கி எடுத்துச் சென்று துரிதப்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் நாம் புதுமையான தயாரிப்புகளில் கவனம் செலுத்தலாம் மற்றும் தயாரிப்புகளுக்கு மதிப்புக் கூட்டல் சேர்க்கலாம். நமது பொம்மை, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் திறனை உலக நாடுகள் அறிந்திருக்கிறது.

நண்பர்களே,

2020-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் வரையறையை மறுபரிசீலனை செய்யும் ஒரு பெரிய முடிவை எடுத்தோம். நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான வரையறையை மீண்டும் விரிவுபடுத்தியுள்ளோம். இதனால் நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகள் தொடர்ந்து முன்னேற நம்பிக்கை பெறுகின்றன. இது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். நமது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு எளிதாக கடன்கள் கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் சுமார் ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைப் பெற்றன, இது இரண்டரை மடங்கு அதிகரித்து சுமார் ரூ.30 லட்சம் கோடியாக இன்று அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் கடன்களுக்கான உத்தரவாதக் காப்பீடு ரூ.20 கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. பணி மூலதனத் தேவைகளுக்கு, ரூ.5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கடன் அட்டைகள் வழங்கப்படும்.

நண்பர்களே,

கடனைப் பெறுவதற்கான வசதியை நாங்கள் வழங்கினோம், மேலும் ஒரு புதிய வகைக் கடன் முறையையும் உருவாக்கினோம். மக்கள் உத்தரவாதமின்றி கடன்களைப் பெறத் தொடங்கினர். கடந்த 10 ஆண்டுகளில், உத்தரவாதமின்றி கடன்களை வழங்கும் முத்ரா போன்ற திட்டங்களால் சிறு தொழில்களும் உதவி பெற்றுள்ளன. கடன்கள் தொடர்பான பல சிக்கல்களும் வர்த்தக இணையதளம் மூலம் தீர்க்கப்படுகின்றன.

நண்பர்களே,

இப்போது கடன் வழங்குவதற்கான புதிய முறைகளை நாம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கும் குறைந்த செலவில் மற்றும் சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதே நமது முயற்சியாக இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த 5 லட்சம் முதல் முறை தொழில்முனைவோர்களுக்கு ரூ.2 கோடி கடன் வழங்கப்படும். முதல் முறை தொழில்முனைவோருக்கு கடன் ஆதரவு மட்டுமல்ல, வழிகாட்டுதலும் தேவை. அத்தகையவர்களுக்கு உதவ தொழில்துறையினர் ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நண்பர்களே,

முதலீட்டை அதிகரிப்பதில் மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்கள் கனவுகளை நனவாக்கும் திறனை நமக்கு வழங்கும். இந்த எதிர்பார்ப்புடன், உங்களுக்கு மிக்க நன்றி.

***

(Release ID: 2108034)
TS/IR/RR/KR