Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

படல்கங்காவில் தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனத்தை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


இன்று இந்த புதிய வளாகத்தை திறந்து வைப்பதற்காக இங்கு வருகை புரிந்ததற்காக நான் மகிழ்கிறேன். உலக பொருளாதாரம் மெதுவாக நகரும் காலகட்டம் இது. வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் பங்குச்சந்தைகள் ஆகியவை மெதுவான வளர்ச்சியை கண்டு வருகின்றன. இந்த பின்னணியில், இந்தியா ஒளிமிக்க இடமாக காணப்படுகிறது. உலகிலேயே அதிகமான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

 

வேகமாக வளர்ந்து வரும் இடத்தை இந்தியா பெற்றுள்ளது விபத்தால் நிகழ்ந்ததல்ல. நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்பதை காண நாம் 2012-13 முதல் திரும்பி பார்க்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை அபாயகரமான நிலையை அடைந்திருந்தது. ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. பணவீக்கம் உயர்ந்திருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வந்தன. நம்பிக்கை குறைந்து காணப்பட்டதால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். பிரிக்ஸ் நாடுகளிலேயே வலுகுறைந்த நாடாக இந்தியா கருதப்பட்டது.

 

இந்த அரசு 3 ஆண்டுகளுக்குள்ளாகவே பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு வருடமும் நிதிப் பற்றாக்குறை இலக்கை குறைத்ததுடன், ஒவ்வொரு வருடமும் அதை அடைந்து வருகிறோம். நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகவும் குறைவு. 2013-ம் ஆண்டு சிறப்பு பண மாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களை அடைத்த பிறகும், அந்நியச் செலவாணி பாதுகாப்பு அதிகரித்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது கடந்த ஆட்சியில் இரண்டு இலக்காக இருந்த பணவீக்கம், தற்போது 4 சதவீதத்திற்கு குறைவாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை நீக்கப்பட்டபோதும், பொது முதலீடுகள் அதிகரித்துள்ளது. பணவீக்க இலக்கை கொண்ட புதிய நிதி கொள்கை கட்டமைப்பு சட்டப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மீதான அரசியலமைப்புத் திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. அது நிறைவேற்றப்பட்டு, நீண்டகாலமாக கனவாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி விரைவில் நனவாக இருக்கிறது. நாங்கள் வணிகத்தை எளிமையாகச் செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இத்தகைய கொள்கைகளால், நேரடி அந்நிய முதலீடு சாதனை அளவை எட்டியுள்ளது. மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை வேகமாக செல்லக்கூடிய சீருந்தை நிறுத்தும் செயல் எனக் கூறிய நமது விமர்சகர்கள் கூட நமது முன்னேற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

நான் ஒன்றை தெளிவாக்குகிறேன். நீண்ட கால நோக்கில் இந்தியா ஒளிமையான இடத்தை பெற இந்த அரசு தொடர்ந்து சரியான மற்றும் உறுதியான பொருளாதார கொள்கைகளை தொடரும். நாங்கள் குறுகிய கால அரசியல் லாபம் பெறுவதற்கான முடிவுகளை எடுக்கமாட்டோம். நாட்டின் நன்மைக்காக கடுமையாக முடிவுகள் எடுக்க நேர்ந்தால், நாங்கள் கடுமையான முடிவுகள் எடுப்பதில் இருந்து விலகிச் செல்ல மாட்டோம். நவீன பொருளாதாரத்தில் நிதிச் சந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சேமிப்பைப் பெற உதவும். அவை சேமிப்பை உற்பத்தி முதலீடுகளுக்கு செலுத்துகின்றன.

 

எனினும், நிதிச் சந்தைகளுக்கு சரியான முறையில் கட்டுப்பாடுகள் இல்லாதபோது, அவை சேதத்தை ஏற்படுத்தும் என வரலாறு தெரிவிக்கிறது. அரசு, சிறந்த கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை – செபி – அமைத்தது. வலுவான பங்கு சந்தைகளை உருவாக்குவதில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (செபி) பங்கு வகிக்கிறது.

 

சமீபத்தில், முன்னோக்கி சந்தைகள் வாரியம் ஒழிக்கப்பட்டது. பொருட்கள் சந்தைகளை கட்டுப்படுத்தும் பணியையும் செபிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சவாலாகும். பொருட்கள் சந்தைகளில், உடனடி சந்தை செபியால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. விவசாய சந்தைகள் மாநிலங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மூதலீட்டாளர்கள் இல்லாமல், பல பொருட்கள் நேரடியாக ஏழைகளாலும், தேவை உள்ளவர்களாலும் வாங்கப்படுகின்றன. எனவே, பொருட்கள் சந்தைகளின் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கம் மிக முக்கியமாக உள்ளது.

 

நிதிச் சந்தைகள் வெற்றிகரமாக செயல்பட, பங்கேற்பாளர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். தேசிய பத்திரங்கள் சந்தைகள் நிறுவனம், பல்வேறு பங்கேற்பாளர்களுக்கு அறிவூட்டி, திறன் சான்றிதழ்கள் வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நமது இயக்கம், ‘திறன் இந்தியா’வாக இருக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகில் எந்தப்பகுதியிலும் உள்ள இளைஞர்களுக்கு இணையாக போட்டியிட தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்தகைய திறன் உருவாக்குதற்கு இந்நிறுவனம் மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. ஏறக்குறைத் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தேர்வாளர்கள் என்.ஐ.எஸ்.எம். தேர்வுகளை எழுதுவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதுவரை என்.ஐ.எஸ்.எம்-ஆல் 5 லட்சம் தேர்வாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

சிறந்த கட்டுப்பாடுகளை கொண்ட பங்கு சந்தைகளை பெற்றுள்ளதால் இந்தியா நற்பெயரை பெற்றுள்ளது. மின்னணுவைப் பயன்படுத்தி வணிகம் நடைபெறுவதும் மற்றும் அதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்துவதும் நமது சந்தைகளை வெளிப்படையாக்கியுள்ளன. ஒரு நிறுவனமாக செபி இதில் பெருமை கொள்ளலாம்.

 

இருப்பினும், நமது பங்கு சந்தைகள் மற்றும் பொருட்கள் சந்தைகள் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நான் நிதிசார்ந்த பத்திரிக்கைகளை பார்க்கையில், நான் ஆரம்ப பொது சலுகைகள் (ஐ.பி.ஓ.) பெறும் வெற்றியையும், சமார்த்திய தொழிலதிபர்கள் திடீரென கோடீஸ்வரர்களாக ஆவதையும் அவ்வப்போது படிப்பேன். உங்களுக்கு தெரியும், எனது அரசாங்கம் புதிய துவக்கங்களை ஊக்குவிப்பதில் மிக ஆர்வமாக உள்ளது. பங்கு சந்தைகள் துவக்க பொருளாதார நிலைக்கு முக்கியமாகும். இருப்பினும், பங்கு சந்தைகள் வெற்றிகரமாக இருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது நிதி வல்லுநர்கள் கருதுவது மட்டும் போதாது. செல்வத்தை உருவாக்குவது நல்லது, ஆனால் என்னை பொருத்தவரை அது முக்கியமான பயன் அல்ல. நமது பங்கு சந்தைகளின் உண்மையான மதிப்பு அவைகளின் பங்களிப்பில் உள்ளது.

 

  • நாட்டின் வளர்ச்சிக்கு

 

  • அனைத்து பிரிவுகளின் வளர்ச்சிக்கு மற்றும்

 

  • பெரும்பான்மையான குடிமக்களின் நல்வாழ்விற்கு

எனவே, நான் நிதிச் சந்தைகளை வெற்றிகரமாக கருத வேண்டுமானால், அவை மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

 

முதலில், உற்பத்தி பயன்பாடுகளுக்கான முதலீட்டை உயர்த்துவது நமது பங்கு சந்தையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். இடர்களை எதிர்கொள்ள பங்குகள் பயன்படும். ஆனால் மக்கள் பலரும், பங்குகள் சந்தைகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், நாய் வாலை ஆட்டுவது போலவும் கருதுகின்றனர்.  நாம் நமது முதலீடு சந்தை தனது முக்கிய செயலான முதலீடு அளிப்பதை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

நமது மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் பயனடையும் வகையில் திட்டங்களுக்கான மூதலீட்டை உருவாக்குவதில் நமது சந்தைகள் தனது திறனை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக, நான் உட்கட்டமைப்பை குறிப்பிடுகிறேன். இன்று, நமது அதிகளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு அல்லது வங்கிகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. உட்கட்டமைப்பிற்கான நிதிக்கு முதலீட்டு சந்தைகளை பயன்படுத்துவது மிகவும் அரிது. உட்கட்டமைப்பு திட்டங்கள் சாத்தியமாக வேண்டுமானால், நீண்ட காலத்திற்கான கடன் மிகவும் அவசியமாகும். நீண்ட கால நிதி பத்திரச் சந்தை நம்மிடம் இல்லை என கூறப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால், கட்டாயமாக இது பிரச்சினையாகும். நிதி வல்லுநர்கள் அவர்களது அறிவைக் கொண்டு சிந்தித்து தீர்வு காண வேண்டும். உட்கட்டமைப்பிற்கான நீண்ட கால முதலீட்டை, முதலீட்டு சந்தைகள் அளிப்பதற்கான வழிகளை காண வேண்டும் என்பதே நான் உங்களுக்கு விடுக்கும் அரைகூவலாகும். இன்று, அரசு அல்லது வெளிநாட்டு வழங்கு நிறுவனங்களான, உலக வங்கி அல்லது ஜெ.ஐ.சி.ஏ. ஆகியவையே உட்கட்டமைப்பிற்கான நீண்ட கால நிதியை வழங்குகின்றன. நாம் அதிலிருந்து மாற வேண்டும். பத்திரச் சந்தைகள் நீண்ட கால உட்கட்டமைப்பு நிதிக்கான ஆதாரமாக உருவாக வேண்டும்.

 

நகர உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிகளவிலான முதலீட்டு தேவைகளை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அரசு தனது குறிக்கோளான நவீன (ஸ்மார்ட்) நகரங்கள் திட்டத்தை துவக்கியது. இதை கருத்தில் கொண்டால், நான் இப்போதும் அதிருப்தியாகிறேன், நாம் நகராட்சி பத்திரை சந்தையை கூட பெற்றிருக்கவில்லை. அத்தகைய சந்தையை உருவாக்கிட பிரச்சினைகள் இருக்கக்கூடும். ஒரு சிக்கலான பிரச்சினைக்கு வல்லுநர் ஒருவர் தனது கண்டுபிடிப்பின் மூலம் தீர்வு காண்பதுதான் அவருக்கு விடப்படும் உண்மையான சவாலாகும். இந்தியாவில் உள்ள 10 நகரங்கள் ஒரு வருடத்திற்குள்ளாக நகராட்சி பத்திரங்களை வெளியிட செபி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை உறுதி செய்யுமா?

 

இரண்டாவதாக, சந்தைகள் சமூகத்தில் உள்ள பெரும் பிரிவினருக்கும் நன்மைகள் அளிக்க வேண்டும் – நமது விவசாயிகளுக்கு. வெற்றியின் உண்மையான அளவு கிராமத்தில் ஏற்படும் தாக்கத்தை பொருத்ததாகுமே தவிர தலால் தெரு அல்லது லுட்யன்ஸ், தில்லியில் ஏற்படும் தாக்கத்தை பொருத்தல்ல. இதை அடிப்படையாக கொண்டு, நாம் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. நமது பங்குச்சந்தைகள், விவசாயத் திட்டங்களுக்கான புதுமையான முறைகளில் முதலீட்டை உருவாக்க வேண்டும். நமது பொருட்கள் சந்தைகள் நமது விவசாயிகளுக்கு, நிதி பரிமாற்றங்களுக்கான வழியாக மட்டும் இருப்பதோடு அல்லாமல், நன்மை பயக்க வேண்டும். விவசாயிகள் பங்குகளை கொண்டு தமது இடர்களை குறைத்துக் கொள்ளலாம் என மக்கள் கூறுவார்கள். ஆனால் செயல்பாட்டில், இந்தியாவில் உள்ள எந்த விவசாயியும் பங்குகளை பயன்படுத்துவதில்லை. இது தான் உண்மை. நாம் பொருட்கள் சந்தைகளை, விவசாயிகளுக்கு நேரடி பயன் அளிக்கும் வகையில் நாம் உருவாக்காத வரை, அவை நமது பொருளாதாரத்தில் மிக உயர்ந்த ஆபரணமாக மட்டுமே கருதப்படுமே தவிர, பயனுள்ள சாதனமாக கருதப்படாது. இந்த அரசு இ-நாம் – மின்னணு விவசாய சந்தையை அறிமுகப்படுத்தி உள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில், இ-நாம் மற்றும் பங்குசந்தைகள் போன்றவற்றுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திட செபி பணியாற்ற வேண்டும்.

 

மூன்றாவதாக, நிதிச் சந்தைகள் மூலம் லாபம் பெறுவோர் நாட்டின் கட்டமைப்பிற்கு வரிகள் மூலம் தமது நியாயமான பங்களிப்பை அளிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், சந்தைகளின் நிதி ஈட்டுவோர் செலுத்தும் வரி மிகவும் குறைவாகும். ஓரளவிற்கு, இது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளால் ஏற்படுகிறது. இதனை தடுத்திட, செபி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறைவான வரி செலுத்தப்படுவதற்கு  நமது வரி சட்ட அமைப்பும் ஓரளவிற்கு காரணமாகும். சில வகையான நிதி வருவாய்களுக்கு, குறைந்த அல்லது ஏதுமற்ற விரி விகிதம் அளிக்கப்படுகிறது. பங்குசந்தை பங்கேற்பாளர்களின் அரசுக்கு பங்களிப்பு குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் அதனை நியாயமான, சிறந்த மற்றும் வெளிப்படையான வகையில் உயர்த்துவதற்கான முறைகளை பரிசீலிக்க வேண்டும். முன்னதாக, சில முதலீட்டாளர்கள் சில வரி ஒப்பந்தங்கள் மூலம் நியாயமற்ற பலன்களை பெறுகிறார்கள் என்ற கருத்து நிலவியது. உங்களுக்கு தெரியும், அத்தகைய ஒப்பந்தங்கள் இந்த அரசால் திருத்தம் செய்யப்பட்டுள்து. எளிமை மற்றும் வெளிப்படத்தன்மையுடன் நியாயம் மற்றும் முன்னேற்றம் கொண்ட நல்ல வடிவமைப்பை கொண்டு வருவது குறித்து மீண்டும் சிந்திப்பதற்கான தருணம் இதுவாகும்.

 

நண்பர்களே,

 

வரவு-செலவுத் திட்டத்திற்கு நிதிச் சந்தைகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதை நான் அறிவேன். வரவு-செலவுத் திட்ட சுழற்சி உண்மை பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. நமது நடப்பு வரவு-செலவுத் திட்டத்தில், செலவினத்திற்கான அங்கீகாரம் பருவமழை காலத்தை எதிர்நோக்கி தயாரிக்கப்படுகிறது. பருவமழை காலத்திற்கு முந்தைய மாதங்களில் அரசின் திட்டங்கள் ஊக்கமுடன் செயல்படுவதில்லை. எனவே, செலவினம் புதிய புத்தாண்டு தொடக்கத்துடன் அங்கீகாரம் பெறும் வகையில் இந்த ஆண்டு, வரவு-செலவுத் திட்டத்திற்கான தேதி, முன்னதாக மாற்றியமைக்க உள்ளோம். இது உற்பத்தியையும், வெளிக்கொணர்வையும் அதிகரிக்கும்.

 

நண்பர்களே,

 

இந்தியாவை ஒரு தலைமுறையிலேயே வளர்ந்த நாடாக உருவாக்குவதே எனது இலட்சியமாகும். உலகத்தரம் வாய்ந்த பங்குசந்தைகள் மற்றும் பொருட்கள் சந்தைகள் இல்லாமல் இந்தியா வளர்ந்த நாடாக இயலாது.  எனவே, இந்த புதிய சகாப்தத்திற்கு ஏற்றவகையில் நிதிச் சந்தைகளை உருவாக்குவதில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். என்.ஐ.எஸ்.எம். அனைத்து வெற்றியையும் பெற நான் வாழ்த்துகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

***