Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஞ்சாபி கலைஞர் தில்ஜித் டோசன்ஜ், பிரதமருடன் சந்திப்பு


பஞ்சாபி கலைஞர் தில்ஜித் டோசன்ஜ், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பன்முகத்தன்மை கொண்டவர் என்றும், திறமையை பாரம்பரியத்துடன் இணைக்கிறார் என்றும் அவரை திரு மோடி பாராட்டினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தில்ஜித் டோசன்ஜின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

தில்ஜித் டோசன்ஜுடன் ஒரு அற்புதமான கலந்துரையாடலில் ஈடுபட்டேன்!

அவர் உண்மையிலேயே பன்முகத்தன்மை கொண்டவர், திறமையையும் பாரம்பரியத்தையும் இணைக்கிறார். இசை, கலாச்சாரம் மற்றும் பல விஷயங்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம்… @diljitdosanjh”

***

TS/BR/KR