Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஞ்சாபில் உள்ள ரவி ஆற்றின் குறுக்கே ஷாபூர்கண்டி அணை (தேசியத் திட்ட) அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பஞ்சாபில் உள்ள ரவி ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் ஷாபூர்கண்டி அணைத்திட்ட அமலாக்கத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 2018-19 முதல் 2022-23 வரை ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய அரசு (பாசனப் பிரிவுக்காக) ரூ.485.38 கோடி உதவி வழங்கும்.

தற்போது மாதோப்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு சென்று வீணாகும் ரவி நதியின் தண்ணீரின் அளவைக் குறைக்க இந்தத் திட்டத்தின் அமலாக்கம் உதவும்.

செலவினம்

ஷாபூர்கண்டி அணைத் திட்டப் பணிகளுக்கு ஆகும் செலவு ரூ. 1973.53 கோடி. (நீர்ப்பாசனப் பிரிவுக்கு ரூ.564.63 கோடி, மின் உற்பத்திப் பிரிவுக்கு ரூ.1408.90 கோடி) இதில் ரூ.485.38 கோடி மத்திய உதவியாக வழங்கப்படும்.

பயனாளிகள்

பஞ்சாபில் 5000 ஹெக்டேரும், ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் 32,172 ஹெக்டேரும் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்தின் அமலாக்கம் 6.2 லட்சம் மனித நாட்கள் சாதாரண தொழிலாளர்களுக்கும் 6.2 லட்சம் மனித நாட்கள் பாதியளவு திறன்கொண்ட தொழிலாளர்களுக்கும் 1.67 லட்சம் மனித நாட்கள் முழுத்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

********

எஸ்எம்பி – உமா