Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்


நாட்டில் பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகளின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகளின் தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் ஆராய்ச்சிகளைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான கழிப்பறை வசதி,  பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூய்மையான, பாதுகாப்பான துப்புரவு என்பது பொது சுகாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்  இந்தியா முன்னிலை வகிப்பது குறித்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”

***

IR/RS/KV/DL