பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தனது ட்விட்டரில் ஃபேம்-II திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் 22.9 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமித்து, 33.9 கோடி கிலோ கரியமில வாயு உமிழ்வைக் குறைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு திரு. மோடி பதிலளித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த எங்கள் அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.”
***
(Release ID: 1901590)
RB/SRI/RR
ग्रीन एनर्जी के क्षेत्र में सतत विकास के लिए हमारी सरकार पूरी तरह से प्रतिबद्ध है। https://t.co/Kx9oDa5CL7
— Narendra Modi (@narendramodi) February 23, 2023