Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்காளதேஷ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு


 

பங்களாதேஷ் மக்கள் குடியரசின்  அதிபர் திரு முகமது அப்துல் ஹமீத் இன்று (31.05.2019) நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளில் சிறப்பான நிலை குறித்து, இருதலைவர்களும் மாபெரும் திருப்தி தெரிவித்தனர். முன் தீர்மானித்த பணி காரணமாக பதவியேற்பு விழாவுக்கு வர இயலாத பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவின் வாழ்த்துக்களையும், அதிபர் தெரிவித்தார்.  பங்களாதேஷிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு மோடிக்கு பங்களாதேஷ் அதிபர் அழைப்பு விடுத்தார்.  இது மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்டது.  தூதரகங்கள் வழியாக  பயணத் தேதிகளை முடிவு செய்ய இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 

பங்காளதேஷின் சுதந்திரப் போராட்டத்தின் போது உருவான இருதரப்பு உறவு இந்தியாவுக்கு மிகச்சிறந்த முன்னுரிமை பெற்றதாக உள்ளது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.  கடந்த ஐந்தாண்டுகளில் நில எல்லை மறுவரையறை போன்ற நிலுவையில் உள்ள சிக்கலான பல பிரச்சினைகளைப் பக்குவத்தோடும், பொறுமையோடும் கையாண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  வங்க பந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானை நினைவுகூரும் பிறந்த நூற்றாண்டு  விழாவினையும் (2020), பங்களாதேஷ் விடுதலையின் 50-ஆவது ஆண்டினையும் (2021) பொருத்தமான முறையில் நினைவுகூர்வதற்கான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக  இந்தியா – பங்களாதேஷ் உறவுகளை புதிய நிலைக்குக் கொண்டு செல்வதையும் பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார். 

இந்தியாவின் புதிய அரசு 30.05.2019 அன்று பதவியேற்ற விழாவில் பங்களாதேஷ் அதிபர் கலந்து கொண்டார்.  மதிப்புக்குரிய விருந்தினர் ஏற்கனவே 2014 டிசம்பரில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்தார்.   அதேபோல், சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்திற்காக இவர், 2018 மார்ச்சில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். 

*****

விகீ/எஸ்எம்பி/வேணி