Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

பங்காரு அடிகளாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆன்மிகமும், இரக்கமும் நிறைந்த அவரது வாழ்க்கை, என்றென்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கும். மனித குலத்திற்குத் தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவிற்கான விதைகளை விதைத்தவர். அவரது பணி பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமும், வழிகாட்டுதலும் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

 

***

ANU/SMB/BS/RS/KPG