Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பக்தர்களுக்கு மேம்பட்ட புனித யாத்திரை அனுபவங்கள் கிடைப்பதை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்


சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துறை அமைச்சர் திரு தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் கையெழுத்தான ஹஜ் ஒப்பந்தம் 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்று திரு மோடி கூறியுள்ளார். “யாத்ரிகர்களுக்கு மேம்பட்ட புனிதப் பயண அனுபவங்களை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்த ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன். இது இந்தியாவிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். அவர்களுக்கு மேம்பட்ட யாத்திரை அனுபவங்களை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.

***

TS/SMB/AG/DL