Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகீரதா இயக்கத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர்; தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பகீரதா இயக்கத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர்; தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பகீரதா இயக்கத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர்; தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பகீரதா இயக்கத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர்; தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் கஜ்வெல் அருகில் உள்ள கோமதிபண்டா கிராமத்தில் பகீரதா இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இத்திட்டம் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் மாநில அரசால் துவங்கப்பட்டதாகும்.

நிகழ்ச்சியில் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்களையும் பிரதமர் திறந்து வைத்தார். ராமகுண்டத்தில் தேசிய அனல்மின் கழகத்தின் சார்பில் 1600 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையம்; ராமகுண்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்து, நின்று போன உரத்தொழிற்சாலையின் புனரமைப்பு; வாரங்கல்லில் காலோஜி நாராயண ராவ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்; மற்றும் மனோஹராபாத்- கொத்தபள்ளிக்கு இடையேயான இருப்புப்பாதை ஆகியவை இவற்றில் அடங்கும். அடிலாபாத் மாவட்டத்தில் ஜெய்ப்பூரில் சிங்கரேணி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள 1200 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசிற்குத் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியில் ஒத்துழைப்பு உணர்வு நிரம்பிய கூட்டாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்த நோக்கத்துடன்தான் மத்திய அரசும் மாநிலங்களும் இப்போது இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

மாநில மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த பகீரதா இயக்கத்தை துவக்கியிருப்பதற்காக மாநில அரசிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்த பிரதமர், மாநில முதல்வர் திரு. கே. சந்திரசேகர் ராவ் தன்னை சந்திக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தண்ணீர் தொடர்பான விஷயங்களைப் பற்றியே பேசி வந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். தண்ணீரின் முக்கியத்துவம், நாட்டின் குடிமக்கள் அனைவரும் அதை சேமிப்பதன் தேவை ஆகியவை குறித்தும் பிரதமர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

புதிய இருப்புப்பாதைக்கான அடிக்கல் நாட்டியது குறித்துப் பேசுகையில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். புத்துயிர் பெறவுள்ள உரத்தொழிற்சாலை மாநில விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். மின் உற்பத்தித் துறை சீர்திருத்தங்கள், பாசன வசதி ஆகியவை பற்றியும், ரயில் தொடர்பு எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைகிறது என்பதைப் பற்றியும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பசுவை காப்பாற்றுவது என்ற போர்வையில் செயல்படும் சட்டவிரோதமான, போலியான நடவடிக்கைக் குழுக்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என மக்களை எச்சரித்த பிரதமர், இத்தகைய குழுக்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாநில அரசுகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

***