Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நோபல் பரிசு பெற்ற திரு. ஆன்டன் ஜீலிங்கருடன் பிரதமர் சந்திப்பு

நோபல் பரிசு பெற்ற திரு. ஆன்டன் ஜீலிங்கருடன் பிரதமர் சந்திப்பு


நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் திரு. ஆன்டன் ஜீலிங்கரை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குவாண்டம் இயக்கவியல் குறித்த தனது பணிக்காக அறியப்பட்ட திரு ஜீலிங்கர், 2022-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கம் குறித்த தனது எண்ணங்களை இயற்பியலாளருடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார். அவரும் திரு ஜீலிங்கரும் சமகால சமூகத்தில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பங்கு மற்றும் எதிர்காலத்திற்கான வாக்குறுதி குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

***

VL/BR/KV