Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நைஜீரிய அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

நைஜீரிய அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது நைஜீரிய அதிபர் திரு போலா அகமது டினுபுவை சந்தித்தார்.

 

இந்தியாவின் தலைமைத்துவத்தில் ஜி 20 உச்சி மாநாட்டின் வெற்றிக்காக நைஜீரிய அதிபர் திரு டினுபு பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனின் நிரந்தர அங்கத்துவத்தை உறுதி செய்ததற்காகவும், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் நலன்களில் கவனம் செலுத்துவதற்காகவும் அவர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

 

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, விவசாயம், சிறுதானியங்கள், நிதி தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

***

ANU/SM/PLM/DL