Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேப்பிட்டா-வில் மியான்மரின் அரசு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

நேப்பிட்டா-வில் மியான்மரின் அரசு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

நேப்பிட்டா-வில் மியான்மரின் அரசு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை


மேதகு அரசு ஆலோசகர் அவர்களே,

மதிப்புமிகுந்த பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்,

கடந்த 2014-ம் ஆண்டில் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க நான் இங்கு வந்தேன். இருந்தாலும், இந்த பொன் நிலமான மியான்மருக்கு முதல் முறையாக இருதரப்பு பயணமாக வந்துள்ளேன். ஆனால், எனக்கு அளித்த அன்பான உபசரிப்பு, எனது தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக மியான்மர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு அரசு ஆலோசகரே,

உங்களது வீரம்மிகுந்த தலைமையின்கீழ், மேற்கொள்ளப்பட்ட மியான்மரின் அமைதி நடவடிக்கை பாராட்டத்தக்கது. நீங்கள் எதிர்கொண்ட சவால்களை நாங்கள் முழுமையாக அறிந்துகொண்டுள்ளோம். ரக்கினே மாநிலத்தில் பயங்கரவாத வன்முறை காரணமாக, அப்பாவி மக்களும், பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்து, நீங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்க நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

மிகப்பெரும் அமைதி நடவடிக்கையாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தாலும் சரி, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து அதற்கான கோணத்தில் பணியாற்றுவதால், மியான்மரின் எல்லை நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மதித்து, அனைத்து தரப்பினருக்கும் அமைதி, நீதி மற்றும் கவுரவம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.   

நண்பர்களே,

இந்தியாவின் ஜனநாயக அனுபவங்கள், மியான்மருக்கும் பொருத்தமானது என்று நான் நம்புகிறேன். எனவே, நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் பத்திரிகை கவுன்சில் போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவதில் நம்மிடையே உள்ள விரிவான ஒத்துழைப்பால் நாங்கள் பெருமையடைகிறோம். பாதுகாப்பு விவகாரத்தில் எங்களது நிலையும், அண்டை நாட்டைப் போன்றது தான். நமது நீண்ட எல்லை மற்றும் கடலோர எல்லைகளில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல், எரிசக்தி துறையில் இணைப்பு, தொடர்பை ஊக்குவிப்பதற்கான நமது முயற்சிகள் ஆகியவை, சிறந்த எதிர்காலத்துக்கான பாதையில் செல்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. கலடான் திட்டத்தில் (Kaladan project) சிட்வே துறைமுகம் (Sittwe port), பலெட்வா உள்நாட்டு நீர்வழிப் பாதை (Paletwa Inland Waterways Terminal) முனையம் ஆகியவற்றுக்கான பணிகளை நாம் முடித்துள்ளோம். சாலை கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. மியான்மரின் மேல் பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய, இந்தியாவிலிருந்து அதிவேக டீசல் வாகனங்களுக்கான இருவழிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மகிழ்ச்சிக்காக மியான்மரில் உயர்தர சுகாதாரம், கல்வி, ஆய்வு வசதிகளை மேம்படுத்துவதற்காக, நமது வளர்ச்சி ஒத்துழைப்பின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், மியான்மர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான அதிநவீன மையம் ஆகியவற்றை குறிப்பிடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டுமே, கல்விக்கான முக்கிய மையங்களாக திகழ்கின்றன. எதிர்காலத்தில், மியான்மரின் தேவைகள் அடிப்படையிலும், மியான்மருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் மட்டுமே நமது திட்டங்கள் இருக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே இன்று கையெழுத்தான ஒப்பந்தங்கள், நமது பல்முனை இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

இந்தியாவுக்கு வர விரும்பும், மியான்மர் குடிமக்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் 40 பேரை விடுவிக்கவும் நாங்கள் முடிவுசெய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அவர்களால், மியான்மரில் தங்களது குடும்பத்தினரை விரைவில் சந்திக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேதகு ஆலோசகர் அவர்களே,

நேப்பிட்டா-வில் நான் இருந்த நேரம், மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. மியான்மரில் நான் தங்கியிருக்க உள்ள மீதமுள்ள நேரத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். பகன் பகுதியில் உள்ள ஆனந்தா கோவிலுக்கு நான் இன்று செல்ல உள்ளேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஆனந்தா கோயில், மற்ற வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இந்தியாவின் உதவியுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யங்கூன் நகரில் இந்திய வம்சாவளி மக்களை சந்திப்பதோடு, மத மற்றும் வரலாற்றுப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களில் எனது மரியாதையை செலுத்த உள்ளேன். வரும் காலங்களில், பரஸ்பரம் நாம் பயனடையும் வகையில், வலுவான மற்றும் நெருங்கிய நட்புறவை கட்டமைக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

 

*****