நேபாள பிரதமர் மேதகு புஷ்ப கமல் தஹல் பிரசண்டா திரு. நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
நேபாள அதிபர் மேதகு பித்யா தேவி பண்டாரி சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது உட்பட இந்திய – நேபாள உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.
அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் நடைமுறை செயல்படுத்துவதில் அனைத்து பங்குதாரர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து பிரதமர் பிரசண்டா எடுத்துரைத்தார். கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக நேபாளத்தில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உள்ளதாக கூறிய பிரதமர் பிரசண்டா இது சம்பந்தமாக இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அமைதி, நிலைத்தன்மை மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்களை கொண்டுவர நேபாள நாடும் அந்நாட்டு மக்களும் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இந்திய அரசு மற்றும் இந்திய மக்களின் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் நேபாள நாட்டில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்தய-நேபாள மக்களின் நன்மைக்காக பல்முனை கொண்ட இந்திய – நேபாள ஒத்துழைப்பு உறவுகளை மேலும் வலுபடுத்த இருதலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.