நேபாள நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சரான திரு. பிமலேந்திர நிதி, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சமீப கால வளர்ச்சி குறித்து திரு. பிமலேந்திர நிதி பிரதமரிடம் விளக்கினார்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல நூற்றாண்டுகால நட்பு மற்றும் உறவுமுறையை மேலும் வலுவாக்குவதிலும் நேபாளத்தின் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் அப்போது கூறினார்.