நேபாளத்தின் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் திரு பிமலேந்திர நிதி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
நேபாளத்தின் துணை பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள திரு பிமலேந்திர நிதிக்கு பிரதமர் வாழ்த்து கூறினார். நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹல் ‘பிரசந்தா’ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நேபாளத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் திரு பிமலேந்திர நிதி விளக்கினார்.
இந்தியா நேபாளம் இடையேயான உறவு அரசாங்கத்தை மட்டும் சார்ந்தது அல்ல. அது இரு நாட்டு மக்களின் உறவையும் குறிக்கிறது. நேபாள மக்களுடன் கொண்டுள்ள பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
இந்தியா நேபாள அரசுக்கும், நிலநடுக்கத்த்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
நேபாள பிரதமர் இந்தியாவிற்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Had an excellent meeting with the Deputy PM & Minister of Home Affairs of Nepal, Mr. Bimalendra Nidhi. https://t.co/E275qHFngn
— Narendra Modi (@narendramodi) August 20, 2016
India-Nepal relations are characterised by strong people-to-people ties. India is committed to strengthen these bonds of friendship.
— Narendra Modi (@narendramodi) August 20, 2016