Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன். வெள்ளையர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் அடைய அவரது துணிவு முக்கிய பங்கு வகித்தது.

நமது சமூகத்தில் உள்ள நலிவடைந்தோர் நலனுக்காக சிந்தித்த மிகச் சிறந்த அறிஞர் நேதாஜி போஸ் அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இறுதி நாட்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம் எங்கள் அரசு பெருமை கொள்கிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ன் தொடர்பான ஆவணங்களை http://www.netajipapers.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****