Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்குப் பிரதமர் அஞ்சலி


பராக்ரம தினத்தை முன்னிட்டு இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் நேதாஜியின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று குறிப்பிட்ட பிரதமர், தைரியம் மற்றும் மனவுறுதியின் உருவகமாக அவர் திகழ்ந்தார் என்றும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தனித்தனி பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

பராக்ரம தினமான இன்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர் தைரியம் மற்றும் மன உறுதியின் உருவகமாக திகழ்ந்தார். அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நாம் பணியாற்றும்போது அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.

இன்று காலை 11:25 மணியளவில், பராக்ரம தின நிகழ்ச்சியில் எனது செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். சுபாஷ் பாபுவைப் போல் சவால்களை எதிர்கொண்டு தைரியமாக செயல்பட நமது வருங்கால தலைமுறையினருக்கு இந்த நாள் உத்வேகம் அளிக்கட்டும்.”

***

(Release ID: 2095316)

TS/SMB/KR