Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நெதர்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

நெதர்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09. 2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது நெதர்லாந்து பிரதமர் திரு  மார்க் ருட்டேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

 

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் வெற்றிக்காக பிரதமர் ரூட்டே பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், சூரிய ஆய்வுக்கான ஆதித்யா திட்டத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டர்கள், இணையதள மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

 

***

ANU/SM/PLM/DL