Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீர் சேமிப்புத் திட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும்- பிரதமர் மோடி

நீர் சேமிப்புத் திட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும்- பிரதமர் மோடி


ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயார்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.. இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு, ரகுபீர்தாஸ் கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2015-16ம் ஆண்டில் மாநில பேரிடர் பதில் நடவடிக்கை நிதி (எஸ்.டி.ஆர்.எப்) பில் மத்திய அரசின் பங்குத் தொகையில் இருந்து 273 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016-17ம் ஆண்டுக்கான எஸ்.டி.ஆர்.எப் நிதியில் இருந்தும், முதல் தவணையாக 143 கோடியே 25 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசானது, எஸ்,டி,ஆர்,ப், நிதியிலிருந்து 12 லட்சம் விவசாயிகளுக்கு 376 கோடி ருபாயை டி,பி,டி, நேரடி பலன் பரிமாற்றம்) முறையில் விநியோகித்துள்ளது. இது தவிர காப்பீட்டுத் தொகை விநியோகம் மூலம் 53 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது பாசனப் பரப்பை 19 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ‘மாநில அரசின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் பண்ணை குட்டைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் இருந்து மீன்வளர்ப்பு பணியையும் அந்த மாநில அரசு செய்கிறது.

அப்போது நீர் சேமிப்புத் திட்டங்களை பெரும் மக்கள் பங்களிப்பு திட்டமாக செயல்படுத்த பிரதமர் அறிவுறுத்தினார். என்,சி,சி, என்,எஸ்,எஸ். என்ஒய்கேஎஸ் மற்றும் சாரணர், சாரணீய இயக்கம் போன்ற ,இளைஞர்கள் அமைப்புகள் வாயிலாக நீர் சேமிப்புத் திட்டங்களை நிறைவேற்ற அவர் வலியுறுத்தினார்.

அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பிட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கான டெண்டர் இறுதிசெய்யப்பட்டுள்ளது பற்றி பிரதமரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

மண் பரிசோதனை தர அட்டை திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மண் பரிசோதனை அட்டை திட்டம் வெற்றி பெற “அணி திரட்டல், துரிதப்படுத்துதல், தொழில்நுட்பம் “ ஆகிய மூன்றும் அவசியம். மண் பரிசோதனை என்பது ஒரு திறனாக மேம்படுத்தப்பட வேண்டும். மண் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கு கடன் உதவி அளிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்தில் தொழில்நுட்ப அவசியம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், புவி குறியிடுதலுடன் கையடக்க கருவிகள் சேவை கிடைக்க வேண்டும் என்றார். இது போன்று நீர்நிலைகளுக்கு அடையாள எண் குறிப்பிட்டு அவற்றையும் புவிக்குறியீடு செய்வது அவசியம் என்றார்.

மத்திய மாநில ஒருங்கிணைப்புடன் பணிகளை இணைந்து செய்ய வேண்டும் என்ற கருத்துடன் கூட்டம் நிறைவடைந்தது