2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த புஜ்ஜில் உள்ள ஸ்ம்ரிதி வனம் என்று அழைக்கப்படும் நீத்தார் நினைவு வனத்திற்கு மக்கள் வருகை தருவது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
குஜராத் இன்பர்மேஷன் என்ற டிவிட்டர் முகவரியில் கூறப்பட்டு இருக்கும் ஒரு ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நீத்தார் நினைவு வனத்திற்கு மக்கள் வருவதைக்காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குஜராத்தின் வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துகிறது. வரவிருக்கும் மாதங்கள் கட்ச் செல்வதற்கு சிறந்த காலமாக இருக்கும். பாலைவன விழா இருக்கிறது, இப்போது நீத்தார் நினைவு வனமும் இருக்கிறது.”
******
Happy to see this. Smriti Van is a tribute to those we tragically lost in the Earthquake of 2001. It also chronicles Gujarat’s resilience. The coming months will be a great time to visit Kutch. There’s the Rann Utsav and now there’s Smriti Van also. https://t.co/545MCxy8k6
— Narendra Modi (@narendramodi) October 14, 2022