பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவற்றில், நிலுவையில் உள்ள வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டப்பணிகளை ரூ.1622.27 கோடி மதிப்பீட்டில், ஆரம்பித்த காலத்தில் இருந்து மூன்று நிதியாண்டுக்குள் முடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்லா தேசிய பூங்கா மற்றும் பலமு புலிகள் சரணாலயம் ஆகியவை நீரில் மூழ்குவதை தடுக்க, அணையில் முந்தைய நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து நீர்மட்டத்தை குறைக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த திட்டம் வடக்கு கோயல் ஆற்றில் நிறைவேற்றப்படுகிறது. இது சோன் ஆற்றின் கிளை நதியான இது, இறுதியில் கங்கையுடன் இணைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதியான பலமு மற்றும் கார்வா மாவட்டங்களில் வடக்கு கோயல் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கட்டுமானப் பணி முதலில் 1972ல் தொடங்கப்பட்டு, 1993ம் ஆண்டு வரையில் தொடர்ந்தது. அதன்பின்னர் பீகார் மாநில வனத்துறையினரால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த அணைப் பணிகள் அப்படியே கிடக்கின்றன. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 67.86 மீட்டர் உயரம் மற்றும் 343.33 மீட்டர் அகலமான கான்கிரீட் அணையான இது, மண்டல் அணை என்றழைக்கப்படுகிறது. இந்த அணை 1160 மில்லியன் கன மீட்டர் (எம்.சி.எம்.) தண்ணீரை சேமிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது. முகமத்காஞ்சில் 819.6 மீட்டர் நீளமான குறுக்கு அணையும் 96 கி.மீ. பிந்தைய நீரோட்ட பகுதிகளையும் இந்த அணை கொண்டுள்ளது; முகமதுகன்ஜ் குறுக்கு அணைப்பகுதியில் நீர்ப்பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் வகையில் வலது மற்றும் இடதுபக்க கால்வாய்கள் உள்ளன. புதிய குறைக்கப்பட்ட முகப்பு அளவானது 341 மீட்டராக உள்ளது. தற்போது மண்டல் அணையின் புதிய சேமிப்பு அளவு 190 எம்.சி.எம். ஆகும். இத்திட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியான ஜார்க்கண்டின் பலமு மற்றும் கார்வா மாவட்டங்கள் மற்றும் பீகாரின் அவுரங்காபாத் மற்றும் கயமா மாவட்டங்களில் ஆண்டுக்கு 1,11,521 ஹெக்டேர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. இப்போது வரையிலான முடிக்கப்படாத இத்திட்டத்தின் மூலம் 71,720 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் முடிக்கப்படும்போது, மேலும் 39,801 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர்ப்பாசன பயனை அடையும். இத்திட்டம் மூலம் இரு மாநிலங்களும் பெறும் நீர்ப்பாசன விவரங்கள் வருமாறு:
மொத்த நீர்ப்பாசன ஆதாரம்:
1,11,521 ஹெக்டேர்
பீகாரில் நீர்ப்பாசன ஆதாரம்:
91,917 ஹெக்டேர்
ஜார்க்கண்டில் நீர்ப்பாசன ஆதாரம்:
19,604 ஹெக்டேர்
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,391.36 கோடி. இதுவரையில் இத்திட்டத்துக்காக ரூ.769.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டத்தை ரூ.1,622.27 கோடி செலவில் மூன்று நிதியாண்டுக்குள் முடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலுவை பணிகளில் பொது கூறு தொகையாக ரூ.1,013.11 கோடியை பி.எம்.கே.எஸ்.ஒய். நிதியில் இருந்து மத்திய அரசு வழங்கும். இதில் தற்போதைய நிகர மதிப்பீடு (என்.பி.வி.) மற்றும் காடு வளர்ப்பு இழப்பீட்டு (சிஏ) ஆகியவற்றுக்கான முறையே ரூ.607 கோடி மற்றும் ரூ.43 கோடி ஆகியவை உள்ளடங்கும். மேலும், நிலுவைப் பணிகளுக்கான ரூ.365.5 கோடியை (பீகார் ரூ.318.64 கோடி மற்றும் ஜார்க்கண்ட் ரூ.46.86 கோடி) பி.எம்.கே.எஸ்.ஒய்.யின் கீழான நீண்டகால நீர்ப்பாசன நிதியம் (எல்.டி.ஐ.எப்.) மூலம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மானியத்தின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மீதமுள்ள நிலுவைப் பணிகளுக்கான 40 சதவீத தொகையான ரூ.243.66 கோடியை (பீகார் ரூ.212.43 கோடி மற்றும் ஜார்க்கண்ட் ரூ.31.23 கோடி) நாபார்டு வங்கியின் எல்.டி.ஐ.எப். மூலம் கடனாக ஏற்பாடு செய்யும். இதற்கான வட்டி விகிதத்துக்கு மானியம் எதுவும் கிடையாது. அது சந்தை நிலவரத்துக்கு ஏற்பவும், வட்டிக்கு எந்த நிதியுதவியும் அளிக்கப்படாததாகவும் இருக்கும்.
மேலும், திட்டத்தின் நிலுவைப் பணிகளை, மத்திய நீர் ஆதார அமைச்சகம், நிதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழான ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமான திருவாளர். வாப்காஸ் லிமிடெட்டை திட்ட மேலாண்மை ஆலோசகராக (பி.எம்.சி.) ஏற்று செயல்படவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அலுவலரை (சி.இ.ஓ.) தலைவராக கொண்ட மத்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழு கண்காணிக்கும்.