Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி இருக்கும் இடங்களில் அவற்றை வாயுவாக்க கொள்கை கட்டமைப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நாட்டில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடங்களில் அவற்றை வாயுவாக்குவதற்கான கொள்கை கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்தது. நிலக்கரியை வாயுவாக்குதல் வழக்கமான முறையில் அவற்றை தோண்டி எடுத்தால், பொருளாதார ரீதியில் பலனளிக்காதது என்று கருதப்படுகிறது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைப் போல, நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் முறையையும், திறந்தவெளி ஏலத்தின் மூலமாகவும், வருமானப் பகிர்வு முறை மூலமும் ஏலத்தில் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் முறை, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமானதாகும். அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஒன்று, நிலக்கரி அமைச்சக உறுப்பினர்களோடும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களோடும் இணைந்து பணியாற்றி, நிலக்கரியிலிந்து வாயு எடுக்கும் இடங்களை தெரிவு செய்து, எந்த நிலக்கரி தொகுதியை ஏலத்தில் விடலாம் என்றும், எந்த தொகுதியை, பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்றும் முடிவு செய்யும்.

இது தொடர்பான ஒப்பந்த ஆவணத்தை தயார் செய்ய நிலக்கரி அமைச்சகம், ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கலாம். ஏலத்தில் விடுவதற்கான ஆவணங்களை தயார் செய்வதற்கும், செயல் திட்டத்தை தயார் செய்வதற்கும், ஏல முறைகளை தயார் செய்வதற்கும், டெண்டர்களை ஆய்வு செய்வதற்கும், அவற்றை மேலாண்மை செய்வதற்கும், மத்திய சுரங்கத் திட்டம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் பொறுப்பான நிறுவனமாக செயல்படும்.

இதன் பொருட்டு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நிலக்கரி தொகுதிகள் ஏலத்தில் விடப்படும். நீண்ட காலத் திட்டமாக, கூடுதல் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஏலத்தில் விடப்படும்.

***